சென்னை ஐஐடி மையத்துக்கு சர்வதேச தரச்சான்று: இயக்குநர் வீ.காமகோடி தகவல்

0
26

சென்னை ஐஐடி நலவாழ்வு மையத்​துக்கு, சர்​வ​தேச தரச்​சான்று கிடைத்​திருப்​ப​தாக, ஐஐடி இயக்​குநர் வீ.​காமகோடி தெரி​வித்​தார்.

மத்​திய கல்வி அமைச்​சகத்​துடன் இணைந்து, சென்னை ஐஐடி​யில் தென்​னிந்​திய பேராசிரியர்​களுக்கு மனநல வாழ்வு தொடர்​பான 2 நாள் பயிலரங்​கம் ஞாயிறு மற்​றும் திங்​கள்​கிழமை நடை​பெற்​றது.

மத்​திய அரசின் மாள​வியா மிஷன் ஆசிரியர் பயிற்சி திட்​டத்​தின்​கீழ் ஏற்​பாடு செய்​யப்​பட்ட இந்த பயிலரங்​கில், தமிழகம், ஆந்​திரம், தெலங்​கா​னா, கேரளம், கர்​நாடகம் ஆகிய தென்​னிந்​திய மாநிலங்​களைச் சேர்ந்த பேராசிரியர்​கள் கலந்​து​கொண்​டனர்.

இதன் தொடக்க விழா​வில், மத்​திய கல்வி அமைச்சக இணைச் செயலர் ரீனா சோனோ​வால் கவுலி பேசும்​போது, ‘‘மாள​வியா மிஷன் ஆசிரியர் பயிற்சி திட்​டத்​தின்​ கீழ், பேராசிரியர்​களுக்​கான இந்த பயிலரங்​கம் நடத்​தப்​படு​கிறது.

இது​வரை நடத்​தப்​பட்ட பயிலரங்​கு​கள் மூலம் 3 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட பேராசிரியர்​கள் பயன்​பெற்​றுள்​ளனர்’’ என்​றார்.

முதல் நிறு​வனம்

ஐஐடி இயக்​குநர் வீ.​காமகோடி பேசும்​போது, ‘‘தொழில்​சார் சுகா​தா​ரம் மற்​றும் பாது​காப்பு மேலாண்​மைக்​கான ஐஎஸ்ஓ தரச்​சான்று 45001:2018 ஐஐடி நலவாழ்வு மையத்​துக்கு கிடைத்​துள்​ளது. இச்​சான்றை டியுவி நார்ட் குழு​மம் வழங்​கியது.

மத்​திய அரசின் உயர் தொழில்​நுட்ப நிறு​வனங்​களில் நலவாழ்வு மையத்​துக்​காக சர்​வ​தேச தரச்​சான்று பெற்ற முதல் நிறு​வனம் சென்னை ஐஐடி’’ என்​றார்.

ஐஐடி டீன் (மாணவர் நலன்) சத்​ய​நா​ராயணா கும்​மாடி, ‘மாணவர் ஆதரவு மாற்​றத்​துக்​கான பயணம் – சென்னை ஐஐடி நலவாழ்வு மா​திரி’ என்​ற தலைப்​பில்​ உரை​யாற்​றி​னார்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here