உலகக் கோப்பை ஹாக்கி தொடர் நெதர்லாந்து மற்றும் பெல்ஜியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் பிரிவில் இந்திய அணி நேற்று தென் ஆப்பிரிக்காவை எதிர்த்து விளையாடியது. இந்த மோதலில் இந்திய அணி 6-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இந்திய அணி தரப்பில் சுனேலிதா டோப்போ, நவ்நீத் கவுர், சுசீலா சானு, தீபிகா, லால்ரெம்சியாமி, சகாஷி ராணி ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். நடப்பு தொடரில் இந்திய மகளிர் அணிக்கு இது முதல் வெற்றியாக அமைந்தது.
‘டி’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் 2-2 என்ற கோல் கணக்கில் சீனாவுடன் டிரா செய்திருந்தது. இந்திய மகளிர் அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நாளை (20-ம் தேதி) இங்கிலாந்துடன் மோதுகிறது.















