ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கடற்படை பாதுகாப்புடன் டேங்கர் கப்பல்களை அனுப்ப இந்தியா முடிவு

0
27

ஈ​ரான் – அமெரிக்கா இடையே ஒப்​பந்​தம் ஏற்படுவதில் இழுபறி நீடிக்​கிறது. ஹார்முஸ் பகு​தி​யில் அமெரிக்க போர்க்​கப்​பல்​கள் முற்​றுகை​யாலும், சரக்கு கப்​பல் போக்குவரத்துக்கு ஈரான் ஏற்​படுத்​தும் இடையூறுகளும் மாதக்​கணக்​கில் நீடித்து வரு​வ​தால், வளை​குடா நாடு​களில் இருந்து கச்சா எண்ணெய் விநி​யோகம் பாதிக்​கப்​பட்டு சர்​வ​தேச சந்தையில் பெட்​ரோலியப் பொருட்​களின் விலை உயர்ந்து வருகிறது.

ரஷ்​யா​விடம் இருந்து கச்சா எண்​ணெய் இறக்​குமதி செய்​வதற்கு அமெரிக்கா விலக்கு அளித்​தா​லும், இது நீண்​ட​காலம் நீடிக்க வாய்ப்​பில்​லை. எனவே, வளை​குடா நாடு​களில் இருந்து தொடர்ந்து கச்சா எண்​ணெய் மற்​றும் சமையல் எரி​வாயு இறக்குமதி செய்​யும் வியூ​கங்​களை இந்​தியா வகுத்து வரு​கிறது. ஹார்​முஸ் ஜலசந்தி பகு​தியை இந்​திய டேங்​கர் கப்​பல்​கள் பாதுகாப்​பாக கடந்து செல்​வதற்​கான நடவடிக்​கைகள் தீவிரப்படுத்​தப்​படு​கின்​றன.

அங்கு இந்​திய போர்க்​கப்​பல்​களின் எண்​ணிக்கை 2 மடங்​காக உயர்த்​தப்​பட்​டுள்​ளது. இந்​தப் போர்க்​கப்​பல்​கள் இந்​திய டேங்​கர் கப்​பல்​கள் ஹார்​முஸ் ஜலசந்​தியை கடந்து செல்​லும்​போது தேவை​யான பாது​காப்பை அளிக்​கும்.

இந்த திட்​டங்​கள் இறுதி செய்​யப்​பட்​டுள்​ள​தாக​வும், மத்திய அரசு இறுதி ஒப்​புதல் அளித்​தவுடன் இந்​திய டேங்​கர் கப்​பல்​கள் ஹார்​முஸ் ஜலசந்​திக்கு செல்​லும் என கூறப்​படு​கிறது. இத்திட்டம் வெற்றி பெற்​றால், வளை​குடா நாடு​களில் இருந்து இந்தி​யா​வுக்கு கச்சா எண்​ணெய் மற்​றும் எல்​பிஜி எரி​வா​யுவை கொண்​டு வரலாம்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here