Home விளையாட்டு செய்திகள் “எனது திட்​டங்​களில் தெளிவாக இருக்​கிறேன்” – சிஎஸ்கே நட்சத்திரம் சஞ்சு சாம்​சன் உற்சாகம்

“எனது திட்​டங்​களில் தெளிவாக இருக்​கிறேன்” – சிஎஸ்கே நட்சத்திரம் சஞ்சு சாம்​சன் உற்சாகம்

0

ஐபிஎல் தொடரில் நேற்று முன்​தினம் நடை​பெற்ற ஆட்​டத்​தில் டெல்லி கேப்​பிடல்ஸ் அணியை 8 விக்​கெட்​கள் வித்தியாசத்​தில் வீழ்த்​தி​யது 5 முறை சாம்​பிய​னான சிஎஸ்கே அணி. இந்த ஆட்​டத்​தில் 156 ரன்​கள் இலக்கை விரட்​டிய சிஎஸ்கே 17.3 ஓவர்​களில் 2 விக்கெட்​கள் இழப்​புக்கு 159 ரன்​கள் எடுத்து வெற்றி பெற்​றது.

தொடக்க வீர​ரான சஞ்சு சாம்​சன் 52 பந்​துகளில், 6 சிக்​ஸர்​கள், 7 பவுண்​டரி​களு​டன் 87 ரன்​களும் கார்த்​திக் சர்மா 31 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 4 பவுண்​டரி​களு​டன் 41 ரன்​களும் விளாசினர். சிஎஸ்கே அணிக்கு இது 5-வது வெற்​றி​யாக அமைந்​தது. 10 ஆட்​டங்​களில் விளை​யாடி உள்ள சிஎஸ்கே 5 வெற்​றி, 5 தோல்வி​களு​டன் 10 புள்​ளி​களை பெற்று பட்​டியலில் 6-வது இடத்​தில் உள்​ளது.

டெல்லி கேப்​பிடல்ஸ் அணிக்கு எதி​ரான ஆட்​டத்​துக்கு பின்​னர் சிஎஸ்கே அணி​யின் சஞ்சு சாம்​சன் கூறிய​தாவது: ரசிகர்​கள் என்னை ‘சேட்​டா’ என்று அழைக்​கிறார்​கள், ஆனால் எனக்கு சஞ்சு என்று அழைக்​கப்​படு​வதே அதி​கம் பிடிக்​கும். நமக்கு எது சரி​யாக இருக்​கும் என்​பதை அறிந்து கொள்​வதுடன் பேட்​டிங்​கில் அடிப்​படை விஷ​யங்​களில் உறு​தி​யாக இருக்க வேண்​டும். டி 20 கிரிக்​கெட்​டில் பேட்​டிங்​கின் போது கைகளின் வேகத்தை நம்ப வேண்​டும். கடந்த இரண்​டு, மூன்று மாதங்​களாக நான் அதைத்​தான் செய்ய முயற்​சிக்​கிறேன்.

என்​னுடைய ஆரம்​பக்​கட்ட நகர்​வு​களில் சில மாற்​றங்​களைச் செய்​துள்​ளேன், அது இப்​போது சிறப்​பாகக் கை கொடுக்​கிறது. நாங்​கள் எவ்​வளவு ரன்​களைத் துரத்​திக் கொண்​டிருக்​கிறோம், ஆடு​களம் எப்​படிச் செயல்​படு​கிறது என்​ப​தைப் பார்த்​த​போது, பவர்​பிள​வில் விக்​கெட் இழப்​பின்றி அல்​லது ஒரு விக்​கெட் இழப்​பிற்கு 30-35 ரன்​கள் எடுத்​தால் கூட போதும் என்று எனக்​குத் தோன்​றியது. ஏனென்​றால், சுழற்​பந்து வீச்​சாளர்​களுக்கு எதி​ராக​வும், மிடில் ஓவர்​களி​லும் என்​னால் என்ன செய்ய முடி​யும் என்​பது எனக்​குத் தெரி​யும். எனது திட்​டத்​தில் எனக்கு தெளி​வான புரிதல் உள்​ளது.

எனவே, பவர்​பிளே​யில் நான் சற்று கூடு​தல் நேரம் எடுத்​துக்​கொண்​டாலும், என்​னிடம் உள்ள ஷாட்​களை வைத்து மிடில் ஓவர்​களில் அதை ஈடு​கட்​டி​விட முடி​யும் என்று நினைத்​தேன். அது​தான் எனது திட்​ட​மாக இருந்​தது. சில நேரங்​களில் அது மிகச் சிறப்​பாகக் கைகொடுக்​கும். அந்த வகை​யில் டெல்லி அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் அது பலன் அளித்​தது. அதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்​சி.

சதம் அடிக்க வேண்​டும் என்ற ஆசை இருந்​தது. ஆனால், அதை அடைவதற்கு நான் சுயநல​மாக இருந்​திருக்க வேண்​டும். போட்​டியை வெல்​வதே முக்​கி​யம் என்று நினைத்​தேன். அதேசம​யம் மறு​முனை​யில் மற்​றொரு வீரரும் மிகச் சிறப்​பாக விளை​யாடிக் கொண்​டிருந்​தார். அதனால் அவரிடம் சென்று “ஒரு சிங்​கிள் எடுப்​பா, நான் சதம் அடிக்​கணும்” என்று சொல்ல எனக்​குத் தோன்​ற​வில்​லை. அவுட் ஆகாமல் களத்​தில் இருந்து போட்​டியை முடித்து வைப்​பது அதிக திருப்​தி​யைத் தரு​கிறது. அதை நான் மிக​வும் ரசித்​தேன். இன்​னும் சில போட்​டிகள் மீத​முள்​ளன, மீண்​டும் ஒரு​முறை சதம் அடிக்​கிறேனா என்று பார்ப்​போம்​. இவ்​வாறு சஞ்​சு சாம்சன் கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version