ஆசியக் கோப்பை, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் பாகிஸ்தான் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
துபாயில் ஆசியக் கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டியும், ஜப்பானில் ஆசிய விளையாட்டுப் போட்டியும் நடைபெறவுள்ளன. இந்நிலையில் இந்தப் போட்டிகளில் பங்கேற்கும் மகளிர் அணிகளை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்(பிசிபி) நேற்று அறிவித்துள்ளது.
இரு போட்டிகளில் பங்கேற்கும் அணிகளுக்கு எய்மன் பாத்திமா கேப்டனாக இருப்பார். ஆசியக் கோப்பை போட்டி துபாயில் ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 13 வரை நடைபெறவுள்ளது. ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானில் செப்டம்பர் 17-ல் தொடங்குகின்றன.
