இஸ்போர்ட்ஸ் செஸ் உலகக் கோப்பை போட்டியில் முன்னாள் உலக சாம்பியனும், நார்வே வீரருமான மாக்னஸ் கார்ல்சென் 2-வது முறையாக கோப்பையை வென்றார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இப்போட்டிகள் நடைபெற்றன. நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் மாக்னஸ் கார்ல்செனும், பெலாரஸ் கிராண்ட்மாஸ்டர் டெனிஸ் லசாவிக்கும் மோதினர்.
முதல் செட்டில் கார்ல்சென் 3-1 என்ற கணக்கிலும், 2-வது செட்டில் 3-1 என்ற கணக்கிலும் லசாவிக்கை வீழ்த்தி 2-0 என்ற கணக்கில் கோப்பையைக் கைப்பற்றினார்.
கடந்த ஆண்டும் இந்த இஸ்போர்ட்ஸ் உலகக் கோப்பையை கார்ல்சென் கைப்பற்றியிருந்தார். இதையடுத்து தொடர்ச்சியாக 2 முறை இந்த கோப்பையை கைப்பற்றிய பெருமை அவருக்குக் கிடைத்துள்ளது.
