தமிழில் வருகிறது ‘ஹவ் டு டிரெய்ன் யுவர் டிராகன்’!

0
460

ஹாலிவுட் ஃபேன்டசி படமான ‘ஹவ் டு டிரெய்ன் யுவர் டிராகன்’ தமிழில் வெளியாகிறது. 2010-ம் ஆண்டு இதே பெயரில் வெளியான அனிமேஷன் படத்தின் ரீமேக் இது. இதன் 2-ம் பாகமும் 2014-ம் ஆண்டு அனிமேஷன் படமாக வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இப்போது இதைத் திரைப்படமாக உருவாக்கியுள்ளனர்.

டீன் டெப்லாய்ஸ் இயக்கியுள்ள இந்த ஆக்‌ஷன் படத்தில் மாசன் தேம்ஸ், நிகோ பார்க்கர், ஜெராட் பட்லர், நிக் ஃப்ரோஸ்ட், ஜுலியன் டென்னிசன் உள்பட பலர் நடித்துள்ளனர்.

பெர்க் தீவில் வசிக்கும் வைக்கிங் மக்களுக்கு பெரும் தொல்லையாக இருக்கிறது டிராகன்கள். அதற்கு எதிரான போராட்டத்தில் வைக்கிங் இளவரசன் ஹிக்கப் ஈடுபடுகிறான். அவனுக்கு டூத்லெஸ் என்ற டிராகனுடன் நட்பு ஏற்படுகிறது. இந்த நட்பு பழைய பயத்தை உடைத்து உண்மையான வலிமையின் புதிய அர்த்தத்தைக் காட்டுகிறது. பல ஆண்டுகள் எதிரிகளாக இருக்கும் மனிதர்களுக்கும் டிராகன்களுக்கும் இடையில் அமைதியை நோக்கிய பாதையைத் தொடங்குவதாகக் கதை செல்லும்.

இந்தப் படம் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய 4 மொழிகளில் ஜூன் 13-ல் வெளியாகிறது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here