பிரபாஸின் ‘த ராஜா சாப்’ ட்ரெய்லர் எப்படி? – காதலும், திகிலும்!

0
292

பிரபாஸ் நடித்துள்ள படம், ‘த ராஜா சாப்’. ரொமான்டிக் ஹாரர் காமெடி படமான இதை மாருதி இயக்கி உள்ளார். தெலுங்கு, தமிழ், இந்தியில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் மாளவிகா மோகனன், நித்தி அகர்வால், ரித்தி குமார் என பலர் நடித்துள்ளனர். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு தமன் இசை அமைத்துள்ளார். இதன் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

ட்ரெய்லர் எப்படி? – மூன்றரை நிமிடங்களுக்கு மேல் ஓடியும் கதை இன்னதுதான் என்பதை யூகிக்கவே முடியாதபடி ஒரு ட்ரெய்லரை வெளியிட்டுள்ளது படக்குழு. காமெடி திகில் படங்கள் பெரியளவில் வெளியாகாத ஒரு காலகட்டத்தில் துணிந்து இப்படி ஒரு கதையை பிரபாஸ் தேர்வு செய்திருக்கிறார்.

‘பாகுபலி’க்கு பிறகு ஒரு பான் இந்தியா வெற்றியை எதிர்நோக்கிக் காத்திருக்கும் அவருக்கு இந்த படம் அதனை சாத்தியமாக்கும் என்ற நம்பலாம். காமெடி, காதல், ஆக்‌ஷன் ஆகியவை உடன் திகிலையும் இணைத்து ஒரு ஃபேமிலி என்டர்டெய்னராக இப்படம் உருவாகியுள்ளது. திரைக்கதை என்ற அந்த ஒற்றை மந்திரமும் நிகழ்ந்து விட்டால் படத்தின் வெற்றி உறுதி. படம் வரும் ஜன.10 அன்று வெளியாகிறது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here