இந்தி நகைச்சுவை நடிகர் அதுல் பர்சுரே காலமானார்

0
364

பிரபல இந்தி மற்றும் மராத்தி பட நகைச்சுவை நடிகர் அதுல் பர்சுரே காலமானார். அவருக்கு வயது 57.

நாடகங்களில் இருந்து சினிமாவுக்கு வந்த இவர் இந்தியில், ஜிந்தகி 50 50, லவ் ரெசிபி, கட்டா மிட்டா, கல்கத்தா மெயில் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். சின்னத்திரை தொடர்களிலும் பங்கேற்று வந்த அவர், புகழ்பெற்ற சின்னத்திரை நிகழ்ச்சியான கபில் சர்மா காமெடி ஷோவிலும் பங்கேற்றிருந்தார்.

கடந்த சில வருடங்களுக்கு முன் அதுல் பர்சுரேவுக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. அதற்காக சிகிச்சை பெற்றுக் குணமடைந்தார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன் அவருக்கு உடல் நிலை மீண்டும் சரியில்லாமல் போனது. மும்பையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் மறைவுக்கு மகாராஷ்டிர முதல்வர்ஏக்நாத் ஷிண்டே மற்றும் திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here