நவராத்திரி கொண்டாட்டத்தின்போது மேற்கத்திய இசை, நடன நிகழ்ச்சி நடத்தினால் போலீஸார் நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு

0
22

நவராத்திரி கொண்​டாட்​டத்​தின்​போது மேற்​கத்​திய இசை நிகழ்ச்​சிகள், கேலிக்​கூத்​துகளு​டன் கூடிய திரைப்பட நடன நாட்​டிய நிகழ்ச்​சிகள் நடத்​தப்​பட்​டால் போலீ​ஸார் நடவடிக்கை எடுக்க வேண்​டும் என உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

இதுதொடர்​பாக பாரத் இந்து முன்​னணி மாநிலச் செய​லா​ளர் கே.டில்​லி​பாபு சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்த மனு​வில் கூறி​யிருந்​த​தாவது: தீமைக்கு எதி​ரான நன்​மை​யின் வெற்​றியைக் கொண்​டாடும் வகை​யில் நவராத்திரி, ஆயுத​பூஜை விமரிசை​யாக கொண்​டாடப்​படு​கிறது.

முன்​பெல்​லாம் நவராத்​திரி கலை நிகழ்ச்​சிகளாக ஆன்​மிகம் சார்ந்த சொற்​பொழி​வு​கள், முப்​பெரும் தேவியரின் புராணங்​களை அடிப்​படை​யாகக் கொண்ட நடன, நாட்​டி​யங்​கள், இசைக் கச்​சேரி​கள் நடத்​தப்​படும்.

ஆனால், தற்​போது கலாச்​சார சீரழிவு காரண​மாக பணம் சம்​பா​திக்​கும் நோக்​குடன் சென்​னை​யில் பல்​வேறு தனி​யார் விடு​தி​களில் விருந்து நிகழ்​வு​கள், திரைப்பட ஆடல், பாடல் நிகழ்ச்​சிகளு​டன் நவராத்​திரி பூஜை விழாக்​கள் நடத்​தப்​படு​கின்​றன.

இதற்​காக பார்​வை​யாளர்​களிடம் தனி​யாக கட்​ட​ண​மும் வசூலிக்​கப்​படு​கிறது. குறிப்​பாக, சென்னை ராயப்​பேட்​டை​யில் உள்ள தனி​யார் மாலில் துர்​காதேவி சிலையை வைத்து திரைப்​படப் பாடல்​களு​டன் கூடிய நடன நிகழ்ச்​சிகள், பாப் பாடல்​களு​டன் கூடிய இசை நிகழ்ச்​சிகள் நடத்​தப்​படு​கின்​றன.

இது​போன்ற நிகழ்​வு​களுக்கு அனு​மதி தரக்​கூ​டாது என போலீ​ஸாருக்கு உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு அதில் கோரி​யிருந்​தார். நீதிபதி வி.லட்​சுமி நாராயணன் முன்பு இந்த வழக்கு விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது, மனு​தா​ரர் தரப்​பில் ஆஜரான வழக்​கறிஞர் ரிச்​சர்ட்​ஸன், ‘‘நவ​ராத்​திரி கொண்​டாட்​டத்​தில் கர்​பா, தாண்​டியா நடனங்​கள் ஓர் அங்​கம் என்​றாலும், மது​பானம் பரி​மாறு​வது, மேற்​கத்​திய இசை​யுடன் கூடிய நிகழ்ச்​சிகளுக்கு போலீ​ஸார் அளித்​துள்ள அனு​ம​தியை ரத்து செய்ய வேண்​டும்’’ என்று கோரி​னார்.

இதையடுத்து நீதிப​தி, ‘‘இது​போன்ற நிகழ்​வு​களுக்கு போலீ​ஸார் கவன​முடன் அனு​மதி அளிக்க வேண்​டும். நிபந்​தனை​களை மீறி நவராத்​திரி கொண்​டாட்​டத்​தின்​போது மேற்​கத்​திய இசை நிகழ்ச்​சிகள், கேலிக்​கூத்​து, திரைப்பட நடன நாட்​டிய நிகழ்ச்​சிகள் நடத்​தப்​பட்​டால் போலீ​ஸார் தகுந்​த நடவடிக்​கை எடுக்​க வேண்​டும்’’ என்​று உத்​தரவி்ட்​டார்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here