கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஒழுகினசேரி பகுதியில் நேற்று (டிசம்பர் 5) இரவு கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் ஊர்ந்து சென்று வந்தன. அப்டா சந்தை முதல் வடசேரி வரையிலும், ஒழுகினசேரி பாலம் முதல் அவ்வை சண்முகம் சாலை நாகராஜா கோவில் வரையிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாயினர். போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர்.