செஸ் உலக சாம்பியன்ஷிப்பில் குகேஷ் – ஜவோகிர் நவ.25-ல் ஜெனிவாவில் மோதல்

0
32

நடப்பு உலக சாம்​பிய​னான இந்​தி​யா​வின் டி.குகேஷ், உஸ்​பெகிஸ்​தான் கிராண்ட் மாஸ்​ட​ரான ஜவோகிர் சிந்​தரோவ் ஆகியோர் மோதும் ஃபிடே உலக செஸ் சாம்​பியன்​ஷிப் போட்டி சுவிட்​சர்​லாந்​தில் உள்ள ஜெனிவா நகரில் வரும் நவம்​பர் 25 முதல் டிசம்​பர் 15 வரை நடை​பெறும் என ஃபிடே அறி​வித்​துள்​ளது.

இந்​தப் போட்​டித் தொடங்​கும் போது குகேஷ், ஜவோகிர் சிந்​தரோவ் ஆகிய இரு​வருக்​குமே 20 வயது மட்​டுமே நிரம்​பி​யிருக்​கும். உலக சாம்​பியன்​ஷிப் வரலாற்​றிலேயே மிகக் குறைந்த வயதில் மோதிக் கொள்​ளும் போட்​டி​யாளர்​கள் என்ற பெரு​மையை பெற உள்​ளனர். உலக சாம்​பியன்​ஷிப் போட்​டித் தொட​ரானது 14 கிளாசிக்​கல் சுற்​றுகளாகக் நடத்​தப்​படும்.

இதில் முதலில் 7.5 புள்​ளி​களைப் பெறும் வீரர் உலக சாம்​பிய​னாக முடிசூட்​டப்​படு​வார். 14 போட்​டிகளும் நிறைவடை​யும் முன்பே இரு​வரில் யாரேனும் ஒரு​வர் வெற்​றிக்​குத் தேவை​யான புள்​ளி​களை எட்​டி​விட்​டால், மீத​முள்ள போட்​டிகள் நடத்​தப்பட மாட்​டாது.

இருப்​பினும், கிளாசிக்​கல் சுற்​றுகளின் முடி​வில் இரு வீரர்​களும் 7-7 என்ற புள்​ளிக் கணக்​கில் சமநிலை பெற்​றால், வெற்​றி​யாளரைத் தீர்​மானிக்​கத் தொடர்ச்​சி​யான டைபிரேக் போட்​டிகள் நடத்தப்பட்டு, அதன் மூலம் இறுதி வெற்​றி​யாளர் உறு​தி செய்யப்படு​வார்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here