தடுமாறும் ராஜஸ்தானை வீழ்த்தும் முனைப்பில் குஜராத் – ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் இன்று மோதல்

0
27

ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்​சிங் மைதானத்​தில் நடை​பெறும் ஆட்​டத்​தில் குஜராத் டைட்டன்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணி​கள் மோதுகின்​றன. இரு அணி​களும் தலா 10 ஆட்​டங்​களில் விளையாடி 6 வெற்​றிகள், 4 தோல்வி​கள் என 10 புள்​ளி​களை பெற்றுள்​ளன. எனினும் நிகர ரன் ரேட் அடிப்​படை​யில் ராஜஸ்தான் அணி (0.510) 4-வது இடத்​தி​லும், குஜ​ராத் டைட்​டன்ஸ் (-0.147) 5-வது இடத்​தி​லும் உள்​ளன.

ராஜஸ்​தான் அணி கடைசி​யாக விளை​யாடிய 5 ஆட்​டங்​களில் 3-ல் தோல்​வியை சந்​தித்​துள்​ளது. இதை ஷுப்​மன் கில் தலைமையிலான குஜ​ராத் டைட்​டன்ஸ் அணி பயன்படுத்திக்கொள்ள முயற்​சிக்​கக்​கூடும். ஏனெனில் குஜ​ராத் ஹாட்​ரிக் வெற்​றிகளை பெற்ற உற்​சாகத்​தில் உள்​ளது. இன்​றைய ஆட்​டத்​தில் வெற்​றியை வசப்​படுத்​தி​னால் புள்​ளி​கள் பட்​டியலில் 4-வது இடத்​துக்கு குஜ​ராத் அணி முன்​னேறும்.

ராஜஸ்​தான் ராயல்ஸ் அணி கடைசி​யாக டெல்லி அணிக்கு எதிரான ஆட்​டத்​தில் 7 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் தோல்வி கண்​டிருந்​தது. அந்த ஆட்​டத்​தில் கேப்​டன் ரியான் பராக் விளாசிய 90 ரன்​கள் உதவி​யுடன் ராஜஸ்​தான் அணி 6 விக்​கெட் இழப்​புக்கு 225 ரன்​களை குவித்​தது. எனினும் அந்த ஆட்​டத்​தில் ராஜஸ்​தான் அணி வெற்​றியை வசப்​படுத்த முடி​யாமல் போனது- ராஜஸ்​தான் ராயல்ஸ் அணி​யைப் பொறுத்​தவரை வைபவ் சூர்​ய​வன்ஷி (404 ரன்​கள்), யஷஸ்வி ஜெய்​ஸ்​வால் (312) மற்​றும் துருவ் ஜூரெல் (290) என முன்​வரிசை வீரர்​கள் சிறப்​பாகச் செயல்​பட்டு அணியைத் தாங்​கிப் பிடித்​தா​லும், கீழ்​வரிசை​யில் கேப்​டன் ரியான் பராக் அதிரடி​யாக விளை​யாட வேண்​டிய கட்​டா​யத்​தில் உள்​ளார்.

ஏனெனில், கீழ்​வரிசை வீரர்​களில் டோனோவன் பெரேரா (229 ரன்கள்) மட்​டுமே 150 அல்​லது அதற்கு மேற்​பட்ட ஸ்ட்​ரைக் ரேட்​டில் ரன்​களைக் குவித்து வரு​கிறார். ராஜஸ்​தான் அணி​யின் பேட்​டிங் வரிசை​யில் துருவ் ஜூரெல் சந்​தேகத்​துக்கு இடமின்றி முக்​கிய அங்​க​மாக இருந்து வரு​கிறார்.

இருப்​பினும் கடைசி 3 ஆட்​டங்​களில் அவரிடம் இருந்து பெரிய அளவி​லான செயல் திறன் வெளிப்​பட​வில்​லை. அதி​லும் முதலில் பேட் செய்​யும் போது அவரிடம் இருந்து அதிரடி​யான ஆட்​டம் வெளிப்​படு​வ​தில்​லை. இதற்கு இன்​றைய ஆட்​டத்​தில் தீர்வு காண துருவ் ஜூரெல் முயற்​சிக்​கக்​கூடும். குஜ​ராத் அணியை பொறுத்​தவரை​யில் அந்த அணி​யின் பேட்​ஸ்​மேன்​கள் சரி​யான நேரத்​தில் சிறந்த பார்மை எட்​டி​யுள்​ளனர்.

ஒரு சதம், 2 அரை சதம் என 385 ரன்​கள் குவித்​துள்ள சாய் சுதர்சன், 378 ரன்​கள் சேர்த்​துள்ள கேப்​டன் ஷுப்​மன் கில் ஆகியோர் சிறப்பான தொடக்​கத்தை பெரிய ஸ்கோ​ராக மாற்​றத் தொடங்கி உள்​ளனர். ஜாஸ் பட்​லர் (335 ரன்​கள்) மீண்​டும் சீரான ஆட்​டத் திறனை வெளிப்​படுத்த தொடங்கி உள்​ளதும் அணி​யின் பலத்தை அதி​கரித்​துள்​ளது.

இருப்​பினும், முன்​வரிசை வீரர்​களையே பெரிதும் நம்​பி​யிருக்​கும் மற்ற அணி​களைப் போலவே குஜ​ராத் அணி​யும் உள்​ளது. டாப் ஆர்டர் விக்​கெட்​டு​கள் அடுத்​தடுத்து சரிந்​தால் கீழ்​வரிசை வீரர்களுக்​குப் பெரும் அழுத்​தத்தை உண்​டாக்​கி​விடும். ஏற்கெனவே மும்பை இந்​தி​யன்ஸ் அணிக்கு எதி​ரான போட்​டி​யில் விக்​கெட்​டு​கள் சரிந்​த​போது, வெறும் 100 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்து குஜ​ராத் அணி மோச​மாகத் தோல்​வியடைந்​திருந்​தது.

பந்​து​வீச்சை பொறுத்​தவரை​யில் 16 விக்​கெட்​களை கைப்​பற்றியுள்ள காகிசோ ரபா​டா, 12 விக்​கெட்​களை வீழ்த்​தி​யுள்ள பிரசித் கிருஷ்ணா, 11 விக்​கெட்​களை கைப்​பற்​றி​யுள்ள முகமது சிராஜ் ஆகியோர் ராஜஸ்​தான் அணி​யின் பேட்​டிங் வரிசைக்கு அழுத்​தம் கொடுக்க முயற்​சிக்​கக்​கூடும். சவாய் மான்​சிங் மைதானத்​தில் நடப்பு ஐபிஎல் சீசனில் இரு முறை 220+ ரன்​கள் இலக்கு வெற்​றிகர​மாக துரத்​தப்​பட்​டுள்​ளது. இதனால் டாஸ் வெல்லும்​ அணி பீல்​டிங்​கை தேர்​வு செய்​ய​வே அதி​க ​வாய்​ப்​புகள்​ உள்ளன.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here