தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குழந்தையை காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்

0
28

தீ விபத்தால் பாதிக்கப்பட்ட பச்சிளம் குழந்தையை சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை மருத்துவர்கள் காப்பாற்றினர்.

இதுதொடர்​பாக, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்​து​வ​மனை டீன் சாந்​தா​ராமன், மருத்​து​வக் கண்​காணிப்​பாளர் பாஸ்​கர், எழும்​பூர் அரசு குழந்​தைகள் நல மருத்​து​வ​மனை இயக்​குநர் மதி​வாணன் ஆகியோர் கூறிய​தாவது: சென்னை புரசை​வாக்​கத்​தில் உள்ள அரசு மகப்​பேறு மருத்​து​வ​மனை​யில் கடந்த மாதம் தனலட்​சுமி என்ற பெண்​ணுக்கு ஆண் குழந்தை பிறந்​தது.

மருத்​து​வ​மனை​யில் இருந்த ஒரு உபகரணத்​தில் மின்​கசி​வால் ஏற்​பட்ட தீ விபத்​தால், குழந்​தை​யின் உடலில் 23 சதவீதம் தீக்​கா​யம் ஏற்​பட்​டது.

இதையடுத்​து, குழந்தை மேல்​சிகிச்​சைக்​காக சென்னை எழும்​பூரில் உள்ள அரசு குழந்​தைகள் நல மருத்​து​வ​மனை​யில் சேர்க்​கப்​பட்​டது.

அப்​போது, குழந்​தை​யின் உடலில் சூடு குறைந்து போயிருந்​தது. நாடி மெலி​தாக துடித்​துக் கொண்​டிருந்​தது.

துரித​மாக செயல்​பட்ட மருத்​து​வக் குழு​வினர், உடனே குழந்​தை​யின் உடலில் ஏற்​பட்​டிருந்த காயத்தை சுத்​தப்​படுத்​தி, திசு சிகிச்​சை​யும் மேற்​கொண்​டனர்.

இதன்​பிறகு, 4 நாட்​களுக்கு தீவிர சிகிச்சை பிரி​வில் செயற்கை சுவாசத்​தில் குழந்தை வைக்​கப்​பட்​டது. தீக்​கா​யத்​தில் கிரு​மித் தொற்று இருந்​த​தால் ஆன்​டிப​யாடிக் மருந்​துகள் தொடர்ந்து 14 நாட்​கள் செலுத்​தப்​பட்​டன.

இதற்​கிடையே, 3-ம் நாளில் குழாய் மூலம் குழந்​தைக்கு தாய்ப்​பாலும் கொடுக்​கப்​பட்​டது. பின்​னர், படிப்​படி​யாக பாலாடை வழி​யாக​வும், நேரடி​யாக​வும் தாய்ப்​பால் கொடுக்​கப்​பட்​டது. தின​மும் காயத்தை சுத்​தப்​படுத்தி தொடர் சிகிச்சை அளிக்​கப்​பட்​டது.

24 நாட்​களில் குழந்தை முழு​மை​யாக குணமடைந்து வீடு திரும்​பி​யுள்​ளது. குழந்​தை​யின் உயிரைக் காப்​பாற்​றிய மருத்​து​வர்​களுக்கு பெற்​றோர் கண்​ணீர் மல்க நன்றி தெரி​வித்​தனர். இவ்​வாறு அவர்​கள்​ கூறினர்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here