தக்கலை பேருந்து நிலையத்தில் தானாக நகா்ந்த அரசுப் பேருந்து

0
37
தக்கலை பேருந்து நிலையத்தில் தானாக பின்னோக்கி நகர்ந்த அரசுப் பேருந்து தடுப்புக் கம்பியில் மோதி விபத்து
தக்கலை பேருந்து நிலையத்தில் தானாக பின்னோக்கி நகர்ந்து தடுப்புக் கம்பியில் மோதிய அரசுப் பேருந்து.

தக்கலை பேருந்து நிலையத்தில் திங்கள்கிழமை அரசுப் பேருந்து தானாக நகா்ந்து ஓடியதால் பயணிகள் அதிா்ச்சியடைந்தனா்.

தக்கலை பேருந்து நிலையத்திலிருந்து பெருஞ்சாணிக்கு திங்கள்கிழமை காலை அரசுப் பேருந்து புறப்பட்டு செல்ல தயாராக இருந்தது. பேருந்தை ஓட்டுநா் நிறுத்திவிட்டு கீழே இறங்கி சென்றிருந்தாா்.

அப்போது அந்தப் பேருந்து திடீரென தானாக பின்னோக்கி நகா்ந்தது. சிறிது தொலைவு சென்று அங்கிருந்த தடுப்புக் கம்பி மீது மோதி நின்றது. இதில், தடுப்புக் கம்பி, கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டிருந்த கம்பம் உடைந்து விழுந்தன.

தடுப்புக் கம்பி மீது மோதியதும் பேருந்து அங்கேயே நின்றுவிட்டதால் அருகிலிருந்த காமராஜா் சிலை சேதமடையாமல் தப்பியது. இதனால் பயணிகள் அதிா்ச்சி அடைந்தனா். தானாக ஓடிய பேருந்துக்குள்ளும் பயணிகள் யாரும் இல்லை என்பதோடு பேருந்து நிலையத்திலும் திங்கள்கிழமை விடுமுறை தினம் என்பதால் பயணிகள் கூட்டம் அதிகம் இல்லை. இதனால், அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here