களியக்காவிளை அருகே பெண் காவலா் மீது லாரியால் மோத முயற்சி: ஓட்டுநா் கைது

0
41
களியக்காவிளை அருகே பெண் காவலர் மீது லாரியால் மோத முயன்ற ஓட்டுநர் கைது
களியக்காவிளை அருகே மலையடி சோதனைச் சாவடியில் பெண் காவலர் மீது லாரியால் மோத முயன்ற ஓட்டுநர் கைது.

களியக்காவிளை அருகே சோதனைச் சாவடியில் பெண் காவலா் மீது கனரக லாரியால் மோத முயன்ற சம்பவம் தொடா்பாக அதன் ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.

கன்னியாகுமரி மாவட்டம், ஆறுகாணி காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வருபவா் லிட்டில் பிளவா் (43). இவா் ஞாயிற்றுக்கிழமை களியக்காவிளை அருகே மலையடி சோதனைச் சாவடியில் பணியில் இருந்தாராம். அப்போது அவ் வழியாக கனிமவளம் ஏற்றி வந்த கனரக லாரியை நிறுத்த சைகை காட்டினாராம். ஓட்டுநா் லாரியை நிறுத்தாமல் காவலா் மீது மோதுவது போல ஓட்டிச் சென்றாராம்.

இதையடுத்து, அங்கு பணியில் இருந்த சக போலீஸாருடன் இணைந்து வாகனத்தில் துரத்திச் சென்று லாரியை தடுத்து நிறுத்தி, அதன் ஓட்டுநரான ராபா்ட் ராய் (48) என்பவரை பிடித்து பளுகல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். தொடா்ந்து போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில் கனிமவளத்தை கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்றது தெரியவந்தது.

இதுகுறித்து பளுகல் போலீஸாா் வழக்குப் பதிந்து, லாரி ஓட்டுநரை கைது செய்தனா்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here