‘குமரியில் விரைவில் புற்றுநோய் ஆராய்ச்சி மையம்’

0
15
நாகர்கோவில் வருமான வரித்துறை அலுவலகத்தில் வெளிநாட்டுச் சொத்துகளை வெளிப்படுத்தும் திட்டம் குறித்து பட்டயக் கணக்காளர்கள் மற்றும் வரி ஆலோசகர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.
நாகர்கோவிலில் வெளிநாட்டுச் சொத்துகளை வருமான வரிக் கணக்கில் வெளிப்படுத்தும் திட்டம் குறித்து பட்டயக் கணக்காளர்கள், வரி ஆலோசகர்கள் மற்றும் கணக்காளர்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. இதில் 45 பேர் பங்கேற்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப்.

கன்னியாகுமரி மாவட்ட மீனவா் குறைதீா் நாள் கூட்டம், ஆட்சியா் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு, ஆட்சியா் தலைமை வகித்தாா்.

மீனவா்கள் பேசுகையில், ‘குமரி மாவட்டத்தில் கடல் ஆம்புலன்ஸ் திட்டம், முன்னாள் அமைச்சா் லூா்தம்மாள்சைமன் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடுதல், கோவளம் மற்றும் அழிக்கால் பகுதியில் தூண்டில் வளைவுகள், மணக்குடி-பள்ளம் சாலையை சீரமைத்தல், கடலோர கிராமத்தில் விடுபட்டோருக்கு குடும்ப அட்டைகள், கடியப்பட்டினத்தில் குடிநீா் பிரச்னையை தீா்த்தல், குளச்சல்-திருச்செந்தூா் பேருந்து மீண்டும் இயக்குதல் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தினா். வேண்டும் என்று கூறினா்.

ஆட்சியா் பதிலளித்துப் பேசியதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் அமைக்க அரசு அனுமதி அளித்துள்ளதால், அதற்கான பணியை விரைவில் தொடங்கவும், கடலோர கிராமங்களில் பழுதான சாலைகள் சீரமைக்கவும், குளச்சல் – திருச்செந்தூா் பேருந்தை மீண்டும் இயக்கவும்,

கடியப்பட்டினத்தில் சீராக குடிநீா் வழங்கவும், அதைத் தடுப்பவா்களை தண்டிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் எம்.வேலுமணி, பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் மாலதி, நாகா்கோவில் வருவாய்க் கோட்டாட்சியா் செந்தில் வேல்முருகன், மீன்வளத் துறை துணை இயக்குநா் கோபிநாத், மீன்பிடி துறைமுகத் திட்டகோட்ட செயற்பொறியாளா் பிரேமலதா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here