பாடலாசிரியரின் வாழ்க்கைக் கதையில் இருந்து உருவான ‘குட் டே’! – தயாரிப்பாளர் தகவல்

0
288

பிருத்விராஜ் ராமலிங்கம், தனது நியூ மொங் பிக்சர்ஸ் மூலம் தயாரித்து நாயகனாக நடித்துள்ள படம், ‘குட் டே’.

அரவிந்தன் இயக்கியுள்ள இதில், காளி வெங்கட், மைனா நந்தினி, ஆடுகளம் முருகதாஸ், பகவதி பெருமாள், வேல.ராமமூர்த்தி, போஸ் வெங்கட் ஆகியோரும் நடித்துள்ளனர். கோவிந்த் வசந்தா இசையமைத்துள் ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் , இப்படத்தை ஜூன் 27 -ம் தேதி வெளியிடுகிறது. இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

பிருத்விராஜ் ராமலிங்கம் பேசும்போது, “ஒரு படம் செய்வதாக இருந்து திடீரென அது ரத்து ஆனபோது, கையில் ஆயிரம் ரூபாய் மட்டுமே இருந்தது. அந்த நேரத்தில் நண்பர் அரவிந்த், ‘படம் பண்ணலாமா?’ என்றார். அந்த நம்பிக்கையில் ஆரம்பமானது ‘குட் டே’. அன்று நாங்கள் பேசிய ஓர் உரையாடல் தான் இந்த படத்துக்கு விதையாக அமைந்தது.

பணம் இல்லாமல், நண்பர்களின் நம்பிக்கையால், உருவானது தான் இந்தப்படம். சிலர் நம்பிக்கையோடு பணம் கொடுத்தார்கள், சிலர் சம்பளம் வேண்டாமென நடித்தார்கள்.

என் நண்பர் பாடலாசிரியர் கார்த்திக் நேத்தாவின் வாழ்க்கை, அவர் சொன்ன குடிப்பழக்கம், மனநிலை பற்றிய உண்மையிலிருந்துதான் இந்தக் கதைக்கரு பிறந்தது. 40-50 மணி நேரம் அவருடன் பேசியதிலிருந்து இப்படம் உருவானது. நான் சினிமாவுக்கு நடிகனாகவே வந்தேன். ஆனால் இந்தப் படம் என் முதல் ஹீரோ வாய்ப்பு. அந்த நம்பிக்கையை எனக்குக் கொடுத்தது இயக்குநர் அரவிந்த்” என்றார். இயக்குநர்கள் ராஜு முருகன், பாலாஜி தரணிதரன் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here