இஸ்ரேலில் ஆட்சி அமைக்க காடி ஐசன்கோட் புது முயற்சி

0
24

இஸ்ரேலில் ஆட்சி அமைக்​கும் புதிய முயற்​சி​யாக, காபந்​துப் பிரதமர் நெதன்​யாகு​வின் லிகுட் கட்​சி​யைக் கூட்​ட​ணிப் பேச்சு​வார்த்​தைக்கு காடி ஐசன்​கோட் அழைத்​துள்​ள​தாக ஊடகங்​கள் தெரி​வித்​துள்​ளன.

அக்​டோபர் 27 அன்று நடை​பெற்ற தேர்​தலில், 120 இடங்​களைக் கொண்ட நெசெட் நாடாளு​மன்​றத்​தில் நெதன்​யாகு தலை​மையி​லான கூட்​டணி 53 இடங்​களை​யும், ஐசன்​கோட் கூட்​டணி 48 இடங்​களை​யும் வென்​றன. அரபுக் கட்​சிகள் 19 இடங்​களைப் பெற்​றன. எந்த அணிக்​கும் பெரும்​பான்​மைக்​குத் தேவை​யான 61 இடங்​கள் கிடைக்​க​வில்லை.

இதையடுத்து முன்​னாள் ராணுவத் தளபதி ஐசன்​கோட்​டுக்கு ஆட்சி அமைக்​கும் பொறுப்பு வழங்​கப்​பட்​டது. நவம்​பர் 8 அன்று அதிபர் ஐசக் ஹெர்​சாக்​கிடம் அந்​தப் பொறுப்​பைப் பெற்ற ஐசன்​கோட், டிசம்​பர் 6-க்​குள் ஆட்சி அமைக்க வேண்​டும்.

இந்​நிலை​யில், அரபுக் கட்​சிகளின் ஆதரவுடன் சிறு​பான்மை அரசு அமைக்​கும் திட்​டத்தை ஐசன்​கோட் கட்சி கைவிட வேண்​டும், பாலஸ்தீன தனிநாட்டை எதிர்க்க வேண்​டும், பாது​காப்பு மண்​டலங்​களில் இஸ்ரேலியப் படைகள் தொடர வேண்​டும், ஹமாஸின் “நுக்பா” பிரி​வினருக்​கான சிறை நிபந்​தனைகளைத் தளர்த்​தக் கூடாது உள்​ளிட்ட பல நிபந்​தனைகளை லிகுட் கட்சி முன்​வைத்​துள்​ள​தாகத் தெரி​கிறது. இந்​தக் கோரிக்​கைகள் குறித்து இரு கட்​சிகளும் இது​வரை கருத்து தெரி​விக்​க​வில்லை.

19 இடங்​களைக் கொண்ட அரபுக் கட்​சிகளின் வெளியாத ரவைப் பெறு​வது தொடர்​பாக, எதிர்க்​கட்சி அணிக்​குள்​ளேயே கருத்து வேறு​பாடு நீடிக்​கிறது. அரபுக் கட்​சிகளின் ஆதரவை நம்​பி​யிருக்​கும் அரசில் சேர​மாட்​டேன் என்று அவிக்​டோர் லிபர்​மன் கூறியுள்​ளார்.

லிகுட் கட்​சி​யுடனான பேச்சு​வார்த்தை தோல்​வியடைந்​தால், சிறு​பான்மை அரசுக்​கான நம்​பிக்கை வாக்​கெடுப்பை நாடாளு​மன்​றத்​தில் ஐசன்​கோட் நடத்​தலாம் என்று கூறப்​படு​கிறது.

இந்​நிலை​யில் தான் காபந்​துப் பிரதமர் நெதன்​யாகு​வின் லிகுட் கட்​சி​யைக் கூட்​ட​ணிப் பேச்சு​வார்த்​தைக்கு காடி ஐசன்​கோட் அழைத்​துள்​ளார் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

77 வய​தான நெதன்​யாகு, 2022 டிசம்​பர் முதல் தீவிர வலதுசாரி அரசுக்​குத் தலைமை வகித்து வரு​கிறார். லஞ்​சம், மோசடி, நம்​பிக்கை மீறல் வழக்கு அவர் மீது நடந்து வரு​கிறது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here