பொங்கல் பண்டிகைக்கு புதிய தரத்தில் இலவச வேட்டி, சேலை: முதல்கட்டமாக ரூ.300 கோடி ஒதுக்கீடு

0
21

அடுத்த ஆண்டு பொங்கல் பண்​டிகைக்கு ரேஷன் அட்​டை​தா​ரர்​களுக்கு இலவச வேட்டி – சேலை வழங்​கப்​பட​வுள்​ள​தாக கைத்​தறித் துறை தெரி​வித்​துள்​ளது. இதற்​கான கொள்​முதலுக்கு முதல்​கட்​ட​மாக ரூ.300 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளி​யிடப்​பட்​டுள்​ளது.

தமிழகத்​தில் பொங்​கல் பண்​டிகையை முன்​னிட்டு குடும்ப அட்​டை​தா​ரர்​களுக்கு ஒவ்​வோர் ஆண்​டும் இலவச வேட்​டி-சேலை தமிழக அரசால் வழங்​கப்​பட்டு வரு​கிறது. புதி​தாக ஆட்​சிக்கு வந்​துள்ள தவெக அரசும் இந்​தத் திட்​டத்தை தொடர​வுள்​ள​தாக தற்​போது அறி​வித்​துள்​ளது.

அதன்​படி 2027 பொங்​கல் பண்​டிகைக்கு ரேஷன் அட்​டை​தா​ரர்​களுக்கு புதிய தரத்​தில் இலவச வேட்​டி, சேலைகள் வழங்​கப்​பட​வுள்​ளன. இதுகுறித்து கைத்​தறித் துறை செயலர் தி.ந.வெங்​கடேஷ் வெளி​யிட்ட அரசாணை விவரம்:

பொது​மக்​களுக்கு ரேஷன் கடைகள் வாயி​லாக விலை​யில்லா வேட்​டி-சேலைகள் வழங்​கும் திட்​டத்தை தொடர்ந்து முன்​னெடுக்க அரசு உயர்​நிலைக் கூட்​டத்​தில் முடிவு செய்​யப்​பட்​டது. கடந்​தாண்​டில் இந்​தத் திட்​டத்​துக்​காக ரூ.566.26 கோடி நிதி ஒதுக்​கப்​பட்​டது.

ஜரிகை பார்டர்

தொடர்ந்து நிகழாண்​டில் பயனாளி​களைக் கணக்​கீடு செய்​வதற்​காக மாவட்ட வாரி​யாக ஆய்வு செய்​த​போது 2 கோடியே 27 லட்​சத்து 83,417 சேலைகளும், 2 கோடியே 25 லட்​சத்து 14,094 வேட்​டிகளும் கொள்​முதல் செய்ய வேண்​டிய தேவை உள்​ளது.

அதற்​கான கால அவகாசம் குறை​வாக இருப்​ப​தால், கடந்த 3 ஆண்​டு​களைப் போலவே சுமார் 177.64 லட்​சம் சேலைகள், 177.22 லட்​சம் வேட்​டிகள் உற்​பத்தி செய்ய இலக்கு நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது. மேலும், கூடு​தலாக தேவைப்​படும் வேட்​டி, சேலைகள் பின்​னர் உற்​பத்தி செய்​யப்​படும்.

நடப்​பாண்​டில் கூடு​தல் தரத்​துடன் புதிய ரக நூலில் வேட்​டிகள், சேலைகள் உற்​பத்தி செய்​யப்​பட​வுள்​ளன. சேலைகளில் சில்​வர் அல்​லது காப்​பர் நிற ஜரிகை பார்​டரும், வேட்​டிகளில் வண்ண பாலியஸ்​டர் பார்​டரும் இடம் பெறவுள்​ளது.

இந்​தத் திட்​டத்​தின் மூலம் கைத்​தறி, பெடல் தறி மற்​றும் விசைத்​தறி நெச​வாளர் கூட்​டுறவு சங்​கங்​களுக்கு ஆண்டு முழு​வதும் தொடர்ந்து வேலை​வாய்ப்பு கிடைக்​கும் வகை​யில் நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது.

இதற்​கான கொள்​முதல் மற்​றும் உற்​பத்தி மதிப்​பீடு ரூ.642.88 கோடி என கணக்​கிடப்​பட்​டுள்​ளது. கடந்த பட்​ஜெட்​டில் இந்த திட்​டத்​துக்​காக ரூ.606.94 கோடி ஒதுக்​கப்​பட்​டது. அதன் அடிப்​படை​யில் முதல்​கட்​ட​மாக ரூ.300 கோடி நிதி ஒதுக்​கப்​படு​கிறது. மீத​முள்ள தொகை அடுத்து விடுவிக்​கப்​படும்.

இத்​திட்​டத்​தின் பலன்​கள் தகு​தி​யான பயனாளி​கள் அனை​வருக்​கும் செல்ல வேண்​டும் என்​ப​தில் அரசு உறு​தி​யாக உள்​ளது. குடும்ப அட்டை இல்​லாத முதி​யோர் ஓய்​வூ​திய திட்​டப் பயனாளி​கள் ஆதார் அடிப்​படையி​லான கைவிரல் ரேகை மூலம் அடை​யாளம் உறு​தி​செய்​யப்​பட்ட பிறகு வேட்​டி, சேலை பெறலாம்.

2026 பொங்​கல் திட்​டத்​தில் எஞ்​சி​யுள்ள பழைய வேட்​டி, சேலைகளை நடப்​பாண்​டில் தீபாவளி பண்​டிகை​யின்​போது முதி​யோர் ஓய்​வூ​தி​யத் திட்​டப் பயனாளி​களுக்கு வழங்​கப்​படும். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here