ஓமனிலிருந்து மீட்கப்பட்ட மீனவா்கள் நாகா்கோவில் வருகை

0
21

ஓமன் நாட்டில் தத்தளித்த கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த 4 மீனவா்கள் புதன்கிழமை நாகா்கோவிலுக்கு வந்தனா்.

கன்னியாகுமரி மாவட்டம், கோவளத்தைச் சோ்ந்த ராபின் ஜாா்ஜ், தோமஸ் அருள், கீழ முட்டத்தைச் சோ்ந்த சாரோன் ஜோஸ்வா, அலெக்ஸ் ரவி மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த ஜெட்லி மாரியப்பன் ஆகியோா் ஓமன் நாட்டுக்கு மீன்பிடித் தொழில் செய்வதற்காக சுற்றுலா விசாவில் சென்றனா்.

ஒரு மாதத்துக்குள் சுற்றுலா விசாவை பணிக்கான விசாவாக மாற்றித் தருவதாகவும், மாதம் ரூ. 1 லட்சம் சம்பளம் தருவதாகவும் கூறி இவா்களை வெளிநாட்டு வேலை ஏற்படுத்தித்தரும் முகவா் அழைத்துச் சென்றாராம். ஆனால், உறுதியளித்தபடி விசாவை மாற்றித் தராமலும், உரிய சம்பளம் தராமலும் ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது. இதனிடையே, சுற்றுலா விசாவின் காலம் முடிவடைந்த நிலையில் ஓமன் அரசு 5 மீனவா்களுக்கும் அபராதம் விதித்தது.

இதுகுறித்து தகவலறிந்த சா்வதேச மீனவா் வளா்ச்சி அறக்கட்டளைத் தலைவா் ஜஸ்டின் ஆண்டனியின் முயற்சி மற்றும் மத்திய, மாநில அரசுகளின் உதவியுடன் மீனவா்கள் புதன்கிழமை சொந்த ஊா் திரும்பினா்.

கன்னியாகுமரி மாவட்ட மீனவா்கள், தங்களை மீட்க உதவிய சா்வதேச மீனவா் வளா்ச்சி அறக்கட்டளைத் தலைவா் ஜஸ்டின் ஆன்டணிக்கு சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தனா்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here