Home விளையாட்டு செய்திகள் ​முதல் டெஸ்ட்: 564 ரன்​களைக் குவித்து டிக்​ளேர் செய்தது இந்தியா

​முதல் டெஸ்ட்: 564 ரன்​களைக் குவித்து டிக்​ளேர் செய்தது இந்தியா

0

இந்தியா​வுக்கு எதி​ரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி முதல் இன்​னிங்​ஸில் 5 விக்​கெட் இழப்புக்கு 113 ரன்​கள் எடுத்து தடு​மாறி வரு​கிறது.

ஆப்​கானிஸ்​தான் அணி இந்​தி​யா​வில் சுற்​றுப்​பயணம் செய்து ஒரே ஒரு டெஸ்ட், 3 டி20 போட்டி கொண்ட தொடர்​களில் விளையாடி வரு​கிறது. முதலில் டெஸ்ட் போட்டி நடை​பெற்று வருகிறது. நியூ சண்​டிகரிலுள்ள முலான்​பூர் மைதானத்​தில் நேற்று முன்​தினம் இந்த டெஸ்ட் போட்டி தொடங்​கியது. முதல் இன்னிங்ஸை விளை​யாடிய இந்​திய அணி முதல் நாள் ஆட்ட நேர இறு​தி​யில் 3 விக்​கெட் இழப்​புக்கு 368 ரன்​கள் குவித்​திருந்​தது.

இந்​நிலை​யில் நேற்று 2-ம் நாள் ஆட்​டத்தை ஷுப்​மன் கில் 103 ரன்களு​ட​னும், ரிஷப் பந்த் 50 ரன்​களு​ட​னும் தொடங்​கினர். சிறப்பாக விளை​யாடிக் கொண்​டிருந்த ஷுப்​மன் கில் 177 பந்துகளில் 126 ரன்​கள் எடுத்த நிலை​யில் சலீம் சஃபி பந்​து​வீச்​சில் அப்​சர் ஜஜாயிடம் கேட்ச் கொடுத்து ஆட்​ட​ மிழந்​தார்.

மறு​முனை​யில் சதத்தை நோக்கி சென்று கொண்​டிருந்த ரிஷப் பந்த் 121 பந்​துகளில் 81 ரன்​கள் எடுத்த நிலை​யில் ஷாஹிதி பந்​து​வீச்​சில், ஒமர்​சா​யிடம் பிடி​கொடுத்து ஆட்​ட​மிழந்​தார். பின்​னர் வந்த துருவ் ஜூரெல் 19, மானவ் சுதர் 28, முகமது சிராஜ் 22 ரன்​கள் சேர்த்​தனர். வாஷிங்​டன் சுந்​தர் 68 பந்​துகளில் 52 ரன்​கள் எடுத்து ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தார். 127 ஓவர்​களில் 8 விக்​கெட் இழப்புக்கு 564 ரன்​கள் எடுத்​திருந்​த​போது முதல் இன்​னிங்ஸை டிக்​ளேர் செய்​வ​தாக கேப்​டன் ஷுப்​மன் கில் அறி​வித்​தார்.

அப்​போது வாஷிங்​டன் சுந்​தர் 52, குல்​தீப் யாதவ் 9 ரன்​கள் சேர்த்து ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தனர். பின்​னர் தனது முதல் இன்​னிங்ஸை ஆப்​கானிஸ்​தான் அணி தொடங்​கியது. அப்​துல் மாலிக் 16, செடிக்குலா அடல் 17, ரஹ்​மானுல்லா குர்​பாஸ் 12, ஹஸ்​மத்​துல்லா ஷாஹிதி 20, அப்​சர் ஜஜாய் 3 ரன்​களில் ஆட்​ட​மிழந்​தனர்.

2-ம் நாள் ஆட்ட நேர முடி​வில் ஆப்​கானிஸ்​தான் 39.5 ஓவர்​களில் 5 விக்​கெட் இழப்​புக்கு 113 ரன்​கள் எடுத்து தடு​மாறி வரு​கிறது. ரஹ்மத் ஷா 43 ரன்​களு​டன் ஆட்​ட​மிழக்​காமல் களத்​தில் உள்​ளார். 451 ரன்​கள் பின்​தங்​கி​யுள்ள நிலை​யில், ஆப்​கானிஸ்​தான் அணி ஃபாலோ-ஆன் நிலைக்​குத் தள்​ளப்​படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்​திய அணி தரப்​பில் மானவ் சுதர் 3 விக்​கெட்​களை​யும், பிரசித் கிருஷ்ணா 2 விக்​கெட்​களை​யும் கைப்​பற்​றினர். முதல் ஓவரிலேயே விக்​கெட் அறி​முக டெஸ்ட் போட்​டி​யின் முதல் ஓவரிலேயே விக்​கெட் வீழ்த்​திய இந்​திய வீரர்​கள் வரிசை​யில் மானவ் சுதரும் இணைந்​தார். ஆட்​டத்​தின் 6-வது ஓவரை வீச வந்த அறி​முக வீரர் மானவ் சுதர், 4-வது பந்​திலேயே அப்​துல் மாலிக்​கின் விக்​கெட்டை வீழ்த்​தி​னார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version