உண்மைச் சம்பவ அடிப்படையில் உருவான ‘ஃபயர்’

0
320

தயாரிப்பாளரும் நடிகருமான ஜேஎஸ்கே இயக்குநராகும் படம், ‘ஃபயர்’. இதில் பாலாஜி முருகதாஸ், ரச்சிதா மகாலட்சுமி, சாக்ஷி அகர்வால், காயத்ரி ஷான், சாந்தினி தமிழரசன், சிங்கம்புலி, சுரேஷ் சக்ரவர்த்தி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜேஎஸ்கே ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு டிகே இசையமைத்துள்ளார்.

சதீஷ் ஜி பாபு ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜீவா வசனம் எழுதியுள்ளார். இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தலைவர் ஆர்.வி.உதயகுமார், தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் என்.முரளி ராமசாமி, டி.சிவா, பாண்டியராஜன் மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

படம்பற்றி ஜேஎஸ்கே கூறும்போது, “இந்தப் படம் தமிழகத்தை உலுக்கிய ஓர் உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டிருக்கிறது. நான்கு பெண்களைப் பற்றிய கதைதான் படம். இதை விழிப்புணர்வு படமாகவும் எடுத்துக்கொள்ளலாம். எஸ்.கே.ஜீவா சிறப்பாக வசனம் எழுதியுள்ளார். போலீஸ் அதிகாரியாக நான் நடித்திருக்கிறேன்.

படம் தயாரானதும் பெண்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு தனித்தனியாகத் திரையிட்டு காண்பித்து அவர்களின் கருத்துகளைக் கேட்டேன். அனைவரும் சிறந்த விமர்சனம் கொடுத்துள்ளனர். விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும்” என்றார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here