தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி 429 ரன்கள் குவிப்பு

0
30

தென் ஆப்​பி​ரிக்கா – ஆஸ்திரேலியா அணிகள் இடை​யி​லான 3-வது மற்​றும் கடைசி டெஸ்ட் போட்டி கேப் டவுன் நகரில் நடை​பெற்று வரு​கிறது. இதன் முதல் இன்​னிங்​ஸில் தென் ஆப்​பி​ரிக்க அணி 329 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது.

அதி​கபட்​ச​மாக மார்க்​கஸ் ஆக்​கர்​மேன் 95, எய்​டன் மார்க்​ரம் 78, டேவிட் பெடிங்​காம் 50 ரன்​கள் சேர்த்​தனர். ஆஸ்திரேலிய அணி தரப்​பில் மிட்​செல் ஸ்​டார்க் 6 விக்​கெட்​களை வீழ்த்​தினார்.

இதையடுத்து விளை​யாடிய ஆஸ்திரேலிய அணி 2-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 90 ஓவர்​களில் 4 விக்​கெட்​கள் இழப்​புக்கு 330 ரன்​கள் குவித்​தது. ஜோஷ் இங்​லிஷ் 85, அலெக்ஸ் கேரி 51 ரன்​களு​டன் ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தனர். நேற்று 3-வது நாள் ஆட்​டத்தை தொடர்ந்து விளை​யாடிய ஆஸ்திரேலிய அணி 125.1 ஓவர்​களில் 429 ரன்​கள் குவித்து அனைத்து விக்​கெட்​களை​யும் இழந்​தது.

தனது 2-வது சதத்தை விளாசிய ஜோஷ் இங்​லிஷ் 135 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 11 பவுண்​டரி​களு​டன் 102 ரன்​கள் எடுத்த நிலை​யிலும், அலெக்ஸ் கேரி 168 பந்​துகளில், 7 பவுண்​டரி​களு​டன் 80 ரன்​கள் சேர்த்த நிலை​யிலும் ஹார்​மர் பந்​தில் ஆட்​ட​மிழந்​தனர். இந்த ஜோடி 5-வது விக்​கெட்​டுக்கு 287 பந்​துகளை சந்​தித்து 185 ரன்​கள் சேர்த்​தது. இதையடுத்து களமிறங்​கிய கேப்​டன் பாட் கம்​மின்ஸ் 0, மிட்​செல் ஸ்​டார்க் 11, நேதன் லயன் 1, கூப்​பர் கானொலி 29 ரன்​களில் வெளியேறினர்.

தென் ஆப்​பி​ரிக்க அணி தரப்​பில் சைமன் ஹார்​மர் 4, மார்கோ யான்​சன் 3 விக்​கெட்​களை வீழ்த்​தினர். காகிசோ ரபாடா, ஜெரால்டு கோட்ஸி, வியான் முல்​டர் ஆகியோர் தலா ஒரு விக்​கெட் கைப்​பற்​றினர்.

இதையடுத்து 100 ரன்​கள் பின்​தங்​கிய நிலை​யில் 2-வது இன்​னிங்ஸை விளை​யாடிய தென் ஆப்​பி​ரிக்க அணி 3-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 47 ஓவர்​களில் 4 விக்​கெட்​கள் இழப்​புக்கு 140 ரன்​கள் எடுத்​திருந்​தது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here