சென்​னை​யில் இருந்து சென்ற 49 பேர் நேபாள வெள்​ளத்​தில் சிக்கியதாக அச்​சம்

0
17

நே​பாளத்​தில் ஏற்​பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு மற்​றும் நிலச்​சரி​வில், குரோம்​பேட்​டையைச் சேர்ந்த தனி​யார் சுற்​றுலா நிறு​வனம் மூலம் கைலாஷ் யாத்​திரை சென்ற 49 தமிழக யாத்​ரீகர்​களைத் தொடர்​பு​கொள்ள முடிய​வில்​லை. இதனால் அவர்​களது குடும்​பத்​தினர் கடும் அதிர்ச்​சி​யில் உள்​ளனர்.

சென்னை விமான நிலை​யத்​தில் இருந்து கடந்த 14-ம் ​தேதி புறப்​பட்ட இந்த குழு​வில் செங்​கல்​பட்டு மாவட்​டத்​தைச் சேர்ந்த 7 பேர், காஞ்​சிபுரத்​தைச் சேர்ந்த 6 பேர், சென்​னையைச் சேர்ந்த 6 பேர் உள்பட பல்​வேறு மாவட்​டங்​களைச் சேர்ந்த 49 பேர் இடம் பெற்​றிருந்​தனர். இதில் 22 ஆண்​களும், 27 பெண்​களும் அடங்​கு​வர்.

கைலாஷ் யாத்​திரையை முடித்​து​விட்டு நேபாளம்​–சீனா எல்​லைப்​பகு​தி​யில் உள்ள குடியேற்ற அலு​வல​கத்​தில் நடை​முறை​களை மேற்​கொண்​டிருந்​த​போது திடீரென வெள்​ளப்பெருக்கு ஏற்​பட்​ட​தாக கூறப்​படு​கிறது. வெள்​ளத்​தில் குடியேற்ற அலு​வலக கட்​டிடம் பலத்த சேதமடைந்​தது. அதன்​பிறகு யாத்​ரீகர்​களைத் தொடர்​பு​கொள்ள முடிய​வில்​லை.

குழு​வின் பயண வழி​காட்டி​யும், டிராவல்ஸ் நிறுவன உரிமை​யாளரின் மகனு​மான சத்​ய​நா​ராயணனும் தொடர்பு எல்​லைக்கு அப்​பால் உள்​ளார். கடைசி​யாக கடந்த 26-ம் தேதி காலை 8.42 மணி​யள​வில் அவர் தொலைபேசி​யில் பேசி​ய​தாக கூறப்​படு​கிறது. அதன் பின்​னர் சத்​ய​நா​ராயணன் உள்பட 49 பேரிடம் இருந்​தும் தகவல் இல்​லை.

இதற்​கிடையே, காஞ்​சிபுரத்​தைச் சேர்ந்த ஓய்​வு​பெற்ற அரசு அதி​காரி​கள் லதா பானு​மதி (63), அருட்​செல்​வம் (64), கோபால், சரஸ்​வதி மற்​றும் சந்​திரன் குப்​பு​சாமி (52), மீனாட்சி நந்​தகு​மார் (34) ஆகிய 6 பேரும் இந்த குழு​வில் சென்​றுள்​ளனர். இவர்​களது நிலை குறித்​தும் தகவல் இல்​லாத​தால் உறவினர்​கள் மாவட்ட ஆட்​சி​யர் அலு​வல​கத்​தில் கண்​ணீருடன் மனு அளித்​தனர்.

கோபால்​-சரஸ்​வதி தம்​ப​தி​யின் மகள் பொற்​செல்​வி, குரோம்​பேட்​டை​யில் உள்ள டிராவல்ஸ் நிறு​வனத்​துக்கு நேரில் சென்று பெற்​றோரின் நிலை குறித்து விசா​ரித்​தார். இதையடுத்து சிட்​ல​பாக்​கம் போலீ​ஸாரும், தாம்​பரம் வட்​டாட்​சி​யரும் நிறு​வனத்​துக்கு சென்று யாத்​ரீகர்​களின் முழு விவரங்​களை சேகரித்​தனர்.

இதற்​கிடையே, செங்​கல்​பட்டு மாவட்​டத்​தைச் சேர்ந்த 7 பேர் இந்த குழு​வில் இருப்​பது உறுதி செய்​யப்​பட்​டுள்​ள​தாக மாவட்ட ஆட்​சி​யர் மு.வீரப்​பன் தெரி​வித்​துள்​ளார். இவர்​கள் குறித்து நேபாளம், சீனா மற்​றும் இந்​திய தூதரகங்​களுக்கு தகவல் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. இது​வரை அதி​காரப்​பூர்​வ தகவல்​ எது​வும்​ கிடைக்​​காத​தால்​ இவர்​களது குடும்​பத்​தினர்​ மற்​றும்​ உறவினர்​கள்​ பரித​வித்​து வரு​கின்​றனர்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here