முதல்வரின் ரூ.25 லட்சம் காப்பீட்டு திட்டம் விரைவில் அமல்: அமைச்சர் அருண்ராஜ் தகவல்

0
17

முதல்வரின் ரூ.25 லட்​சம் காப்​பீட்டு திட்​டம் விரை​வில் அமல்​படுத்​தப்​படும். புதிய அட்டை தேவை​யில்​லை. பழைய அட்டை வைத்து பயன்​படுத்தி கொள்​ளலாம் என்று சுகா​தா​ரத்​துறை அமைச்​சர் அருண்​ராஜ் தெரி​வித்​தார்.

சென்னை ராஜீவ்​காந்தி அரசு மருத்​துவ கல்​லூரி மருத்​து​வ​மனை​யின் 2, 3-ம் தளங்​களில் ரூ.1.50 கோடி​யில் நவீன தொழில்​நுட்ப வசதி​களு​டன் புதுப்​பிக்​கப்​பட்ட இரண்டு விரிவுரை அரங்​கு​களை சுகா​தா​ரத்​துறை அமைச்​சர் அருண்​ராஜ் திறந்து வைத்​தார்.

மருத்​துவ கல்வி மற்​றும் ஆராய்ச்சி இயக்​குநர் (பொ) வா.லோக​நாயகி, ராஜீவ்​காந்தி அரசு பொது மருத்​து​வ​மனை டீன் சாந்​தா​ராமன், ஆர்​எம்​ஓக்​கள் உமாப​தி, அறவாழி உள்​ளிட்​டோர் உடன் இருந்​தனர்.

அப்​போது, அமைச்​சர் அருண்​ராஜ் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: முதலமைச்​சரின் விரி​வான மருத்​துவ காப்​பீட்டு திட்​டத்​தில் புதி​தாக அறிவிக்​கப்​பட்​டுள்ள காப்​பீட்​டுத் தொகை ரூ. 25 லட்​ச​மாக உயர்த்​தும் திட்​டம் விரை​வில் அமல்​படுத்​தப்​படும். இதற்​காக புதிய காப்​பீட்டு அட்டை எது​வும் தேவை​யில்ல.

பழைய அட்​டையையே பயன்​படுத்தி கொள்​ளலாம். காப்​பீட்டு தொகை ரூ.5 லட்​சத்​திலிருந்து ரூ.25 லட்​ச​மாக உயர்த்​தப்​படு​வ​தால், காப்​பீட்டு கட்​ட​ணம் 5 மடங்கு அதி​கரிக்​கும் என்று அர்த்​தமில்​லை. உயர் சிகிச்சை மற்​றும் காப்​பீடு கோரும் குடும்​பங்​களின் எண்​ணிக்கை குறை​வாகவே இருக்​கும். இதற்கு தேவை​யான நிதி ஒதுக்​கீடு செய்​யப்​படும்.

ஏஎச்​1என்1 மற்​றும் டெங்கு பாதிப்​பு​கள் குறித்து பொது​மக்​கள் தேவையற்ற அச்​சம் கொள்ள தேவை​யில்​லை. முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கைகள் எடுக்​கப்​பட்டு வரு​கிறது. காய்ச்​சல் பரிசோதனை​கள் அதி​கள​வில் நடத்​தப்​படு​வ​தாலேயே பாதிப்பு எண்​ணிக்கை அதி​க​மாக தெரி​கிறது. அரசு மருத்​து​வ​மனை​களில் அனைத்​து​வித​மான முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கைகள் மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளன.

மழைக்​காலம் என்​ப​தால், வீட்டை சுற்றி நல்ல தண்​ணீர் தேங்​காமல் பார்த்து கொள்ள வேண்​டும். பகலில் கடிக்​கும் ஏடிஸ் கொசுக்​களால் டெங்கு பரவு​கிறது. அதனால், முன்​னெச்​சரிக்​கை​யாக இருக்க வேண்​டும். பள்ளி மாணவர்​களுக்​கான காய்ச்​சல் முகாம்​கள் நடத்​தப்​படும்.

காய்ச்​சலுடன் தலை​வலி, வாந்​தி, உடல் வலி அதி​கம் இருந்​தால் உடனடி​யாக அரு​கில் உள்ள அரசு மருத்​து​வ​மனை அல்​லது ஆரம்ப சுகா​தார நிலை​யங்​களுக்கு சென்று மருத்​துவ ஆலோ​சனையைப் பெற வேண்​டும்.

செயற்கை கருத்​தரிப்பு மையங்​கள் மேலும் பல மாவட்ட அரசு மருத்​து​வ​மனை​களுக்கு விரி​வாக்​கம் செய்​யப்​படும். புற்​று​நோய் சிகிச்​சைக்​கான கீமோதெரபி மருந்​துகளின் தட்​டுப்​பாடு தொடர்​பாக ஆய்வு செய்து உரிய நடவடிக்​கை எடுக்​கப்​படும்​. இவ்​வாறு அவர்​ தெரிவித்​தார்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here