ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான கடைசி மற்றும் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று ஹோபர்ட் நகரில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 48.3 ஓவர்களில் 328 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. பென் டக்கெட் 115 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 15 பவுண்டரிகளுடன் 133 ரன்கள் விளாசினார். வில் ஜேக்ஸ் 59 ரன்கள் எடுத்தார்.
ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஜேக் எட்வர்ட்ஸ் 4, மேட் ரென்ஷா 3 விக்கெட்களை வீழ்த்தினர். 329 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 46.5 ஓவர்களில் 231 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
அதிகபட்சமாக மேட் ரென்ஷா 55, ஜேக் எட்வர்ட்ஸ் 31 ரன்கள் சேர்த்தனர். இங்கிலாந்து அணி சார்பில் சோனி பாகர் 4, லியாம் டாவ்சன் 3 விக்கெட்களை வீழ்த்தினர்.
97 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2-1 என கைப்பற்றி கோப்பையை வென்றது. முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. 2-வது ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 135 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்திருந்தது.














