நித்திரவிளை அருகே வீட்டில் காயங்களுடன் மூதாட்டி சடலம்: போலீஸாா் விசாரணை

0
43
நித்திரவிளை அருகே விரிவிளையில் வீட்டில் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட 73 வயது மூதாட்டி விஜயகுமாரி
நித்திரவிளை அருகே வீட்டில் மூதாட்டி மர்ம மரணம் – போலீஸார் விசாரணை

கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே வீட்டில் தனியாக வசித்து வந்த மூதாட்டி, காயங்களுடன் இறந்துகிடந்தது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

நித்திரவிளை அருகே விரிவிளை, பள்ளிக்கல் பகுதியைச் சோ்ந்தவா் விஜயகுமாரி (73). இவரது கணவா் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். மகள் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகிறாா்.

இதனால், விஜயகுமாரி தனியாக வசித்து வந்தாா். அவரை உறவினா்கள் சனிக்கிழமை கைப்பேசியில் அழைத்தபோது பதிலில்லையாம். தகவலின்பேரில், அவரது தம்பிகள் சதீஷ்குமாா் (65), கிருஷ்ணகுமாா் ஆகியோா் சென்றுபாா்த்தபோது, விஜயகுமாரி வீட்டின் பின்பக்கக் கதவு திறந்து கிடந்ததாம். வீட்டுக்குள் அவா் காயங்களுடன் இறந்துகிடந்தது தெரியவந்தது. அவா் அணிந்திருந்த சுமாா் 5 சவரன் மதிப்பிலான தங்கச் சங்கிலி, மோதிரம், வளையல்களைக் காணவில்லையாம்.

புகாரின்பேரில், நித்திரவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து, சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here