‘செல்போன்களை பார்க்கும் அளவுக்கு கூட கோப்புகளை பார்க்க நேரம் இல்லையா?’ – அதிகாரிகளை சாடிய முதல்வர் சந்திரபாபு நாயுடு

0
21

செல்​போன்​களை பார்க்​கும் அளவுக்கு கூட கோப்புகளை பார்க்க நேரம் இல்​லை​யா? என மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்​டில் ஆந்​திர முதல்​வர் சந்திரபாபு நாயுடு அரசு அதிகாரி​களை சாடி​னார்.

அமராவ​தி​யில் 8-வது மாவட்ட ஆட்​சி​யர்​கள் மாநாடு முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு தலை​மை​யில் நடைபெற்றது. 2-வது நாளாக நேற்று நடந்த மாநாட்​டில் சந்​திர​பாபு நாயுடு பேசி​ய​தாவது: மக்​களின் பிரச்​சினை​கள், அதுதொடர்​பாக நிலு​வை​யில் உள்ள கோப்​பு​கள் குறித்து ஆலோ​சனை நடத்​தப்​படும் இந்த வேளை​யில், சில துறை​களைச் சேர்ந்த தலைமை அதி​காரி​கள் இந்த கூட்​டத்​துக்கு வராமல் இருப்​பது ஆச்​சரிய​மாக இருக்​கிறது.

அவர்​களுக்கு என்ன தைரி​யம்? அவர்​கள் குறித்து சம்​மந்​தப்​பட்ட செய​லா​ளர்​கள் காரணங்​களை விளக்கி எனக்கு பதில் அளிக்க வேண்​டும். சில அதி​காரி​கள் செல்​போன்​களை பார்க்க செல​விடும் நேரத்தை கூட கோப்​பு​களை பார்க்க செல​விடு​வ​தில்​லை. செல்​போன்​கள் இல்​லாமல் சில மணி நேரம் கூட இருக்க முடி​யாத நிலை​யில் உள்​ளீர்​கள். ஒவ்​வொரு துறை​யிலும் பல நாட்​கள் கோப்​பு​கள் தேங்கி கிடக்கின்றன. எதனால் கோப்​பு​கள் தேங்​கு​கின்​றன.

இதே​போன்று அமைச்​சர்​களில் ராம்​பிர​சாத் ரெட்​டி, கொல்லா ரவீந்​தி​ரா, கேஷவ் ஆகியோர் கோப்​பு​களை பரிசீலிக்க அதிக நேரம் எடுத்​துக் கொள்​வ​தாக​வும் புகார்​கள் வரு​கின்​றன.

நான் கூட கோப்​பு​களை பார்க்க அதி​கபட்​சம் 4 நாட்​கள் வரை மட்​டுமே நேரம் எடுத்து கொள்​கிறேன். அனைத்து அமைச்​சர்​களும் கோப்​பு​களை உடனுக்​குடன் பார்த்து அனுப்பி விடுங்​கள். கோப்​பு​கள் மேஜைகளை எவ்​வளவு விரை​வாக கடக்​கிறதோ, அவ்​வளவு விரை​வாக அரசாட்​சி​யும் நடக்​கும். இல்​லை​யேல் ஆமை வேகத்தில்​தான் இந்த அரசு நடக்​கும்​. இவ்​வாறு அவர்​ பேசி​னார்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here