Home தேசிய செய்திகள் மக்களவையில் தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேற என்டிஏ கூட்டணி அரசுக்கு திமுக ஆதரவு அவசியம்

மக்களவையில் தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேற என்டிஏ கூட்டணி அரசுக்கு திமுக ஆதரவு அவசியம்

0

நாடாளு​மன்ற மழைக்​காலக் கூட்​டத்​தொடரில் மகளிர் இடஒதுக்​கீடு மற்​றும் தொகுதி மறு​வரையறை மசோதா மீண்​டும் சமர்ப்​பிக்​கப்பட உள்​ளது.

கடந்த ஏப்​ரல் மாதம் நடை​பெற்ற சிறப்பு கூட்​டத்​தொடரில் இந்த 2 மசோ​தாக்​களும் மக்​களவை​யில் தோல்​வியடைந்​தன. ஆனால் இந்​த​ முறை, மம்தா பானர்​ஜி​யின் திரிண​மூல் காங்​கிரஸ் (டிஎம்​சி), உத்​தவ் தாக்​கரே​வின் சிவசேனா (யுபிடி) ஆகிய​வற்​றின் உட்​கட்​சிப் பூசல்​களும் தேசி​ய​வாத காங்​கிரஸ் தலை​வர் சரத் பவாரின் திடீர் மனமாற்​ற​மும் சாதக​மான நிலையை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

இருப்​பினும், மூன்​றில் இரண்டு பங்கு ஆதரவு இன்​னும் கிடைக்கவில்​லை. இச்​சூழலில் திமுகவை தங்​கள் பக்​கம் ஈர்க்க என்​டிஏ திட்டமிட்டுள்​ளது. தொகுதி மறு​வரையறை மற்​றும் மக்களவை விரி​வாக்​கத்தை மிகக் கடுமை​யாக எதிர்த்த ஒரே கட்சி திமுக ஆகும். மக்​கள் தொகை கட்​டுப்​பாட்​டில் சிறப்​பாகச் செயல்​பட்ட தென்​னிந்​திய மாநிலங்​கள், தொகுதி மறுவரையறையால் மக்​களவை இடங்​களை இழக்க நேரிடும் என்று திமுக தலை​வர் ஸ்டா​லின் வாதிடு​கிறார். திமுக​வின் இந்த எதிர்ப்பு நிலைப்​பாட்​டால், கடந்த ஏப்​ரலில் அந்த மசோதா தோல்வி அடைந்​தது.

ஆனால், கடந்த 3 மாதங்​களில் தமிழ்​நாடு மற்​றும் மேற்கு வங்கத்தில் அரசி​யல் மாற்​றங்​கள் நிகழ்ந்​துள்​ளன. தமிழ்​நாட்​டில் திமுக தற்​போது ஆட்​சி​யில் இல்​லை. காங்​கிரஸுட​னான அதன் பல்லாண்டு உறவும் மோசமடைந்​துள்​ளது. இத்​தகைய அரசி​யல் மாற்​றங்​களுக்கு மத்​தி​யில், இந்த 2 மசோ​தாக்​களை​யும் நிறைவேற்​று​வ​தில் மோடி அரசு திமுக மீது தனி நம்​பிக்கை கொண்​டுள்​ள​தாக பேச்சு எழுந்​துள்​ளது.

கடந்த முறை இந்த மசோ​தாவுக்கு மக்​களவை​யில் இருந்த 528 உறுப்​பினர்​களில், 298 பேர் ஆதரித்​தும் 230 பேர் எதிர்த்​தும் வாக்களித்​தனர். தற்​போது என்​டிஏ.வுக்கு மக்​களவை​யில் 299 உறுப்பினர்​கள் உள்​ளனர். இத்​துடன் டிஎம்​சி​யின் 20 எம்.பி.க்​கள் ஆதர​வால் இந்த எண்​ணிக்கை 319 ஆகவும் தற்​போது பேச்சுவார்த்தை நடத்​திவரும் சரத் பவார் கட்​சி​யின் 8 எம்.பி.க்களை சேர்த்​தால் இது 327 ஆகவும் உயரும்.

இதனிடையே கடந்த ஏப்​ரலில் 5 என்​டிஏ அல்​லாத எம்.பி.க்​கள் ஆதரவு அளித்​ததன் அடிப்​படை​யில் மொத்த எண்​ணிக்கை 332 ஆக உயர்ந்​துள்​ளது. மக்​களவை​யில் மொத்​தம் 543 எம்.பி.க்​கள் உள்ள நிலை​யில், மூன்​றில் 2 பங்கு பெரும்​பான்​மைக்கு 360 உறுப்பினர்​களின் ஆதரவு தேவை. எனவே, அரசுக்கு மேலும் 28 எம்.பி.க்​களின் ஆதரவு தேவைப்​படும். இதனால், திமுக​வின் ஆதரவு இல்​லாமல் இந்த பெரும்​பான்​மையை அடைவது கடினம். திமுக​வின் 22 எம்.பி.க்​களின் நேரடி அல்​லது மறை​முக ஆதரவு கிடைத்​தால் மட்​டுமே மசோதா எளி​தாக நிறைவேறும் சூழல் உள்ளது.

இதற்​காக திமுக​வுடன் பாஜக தலைமை தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வரு​கிறது. இதில் திமுக சார்​பில் சில சிக்கல்​களை தீர்க்​கும்​படி கோரிக்கை வைக்​கப்​பட்​டுள்​ளது. மசோதா மீதான நிலைப்​பாடு குறித்து திமுக இன்​னும் எந்த முடிவும் எடுக்​கா​விட்​டாலும் மத்​திய அரசுடன் ஒரு மென்​மை​யைக் காட்​டு​கிறது. எனவே இந்த மசோ​தாவுக்கு தி​முக ஆதரவு அளிக்காவிட்​டாலும் வாக்​கெடுப்​பில் இருந்து வில​கி​யிருக்​கும்​ என்று ஆளும்​ என்​டிஏ அரசு நம்​புகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version