Home தேசிய செய்திகள் ​வெள்ள நிலவரம் குறித்து வாராணசி மேயர், ஆட்சியரிடம் விசா​ரித்தார் பிரதமர் மோடி

​வெள்ள நிலவரம் குறித்து வாராணசி மேயர், ஆட்சியரிடம் விசா​ரித்தார் பிரதமர் மோடி

0

உத்​தர பிரதேச மாநிலத்​தில் பெய்து வரும் கனமழை காரண​மாக, அங்​குள்ள வாராணசி​யில் கங்கை ஆற்​றின் நீர்மட்டம் அபாய எச்​சரிக்கை அளவைத் தாண்​டிச் செல்​கிறது.

இதையடுத்​து, மாவட்ட நிர்​வாகம் அனைத்து படகு சேவைகளையும் நிறுத்தி வைத்​ததுடன், வெள்​ளத்​தால் பாதிக்​கப்​பட்ட பகு​தி​களில் கண்​காணிப்​பை​யும் தீவிரப்​படுத்​தி​யது. மேலும், பக்​தர்​கள் மற்​றும் பொது​மக்​கள் படித்​துறை​களுக்​குச் செல்ல வேண்​டாம் என்​றும், நீரோட்​டம் அதி​க​மாக உள்ள பகு​தி​களுக்​குள் செல்ல வேண்​டாம் என்​றும் நிர்​வாகம் அறி​வுறுத்​தி​யது.

இந்​நிலை​யில், வாராணசி மக்​கள​வைத் தொகுதி எம்​.பி.​யான பிரதமர் மோடி, வாராணசி நகரில் ஏற்​பட்​டுள்ள வெள்ள நில​வரம் குறித்​து, அந்த நகரின் மேயர் மற்​றும் மாவட்ட ஆட்​சி​யரிடம் தொலைபேசி​யில் தொடர்பு கொண்​டு, நிலை​மையை கேட்​டறிந்​தார். மேலும், கோயில் நகரில் மேற்​கொள்​ளப்​பட்டு வரும் நிவாரண நடவடிக்​கைகள் குறித்து அதி​காரி​கள் பிரதமரிடம் விளக்​கினர்.

பொது​மக்​களுக்கு பாதிப்பு மற்​றும் சிரமம் ஏற்படாதவாறு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளை பிரதமர் வலியுறுத்தினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version