Home தேசிய செய்திகள் ​அபிநந்தன் விமானப் படையில் இருந்து விலகி தனி​யார் விமான நிறுவனத்​தில் சேர்ந்​தார்

​அபிநந்தன் விமானப் படையில் இருந்து விலகி தனி​யார் விமான நிறுவனத்​தில் சேர்ந்​தார்

0

பாகிஸ்தான் எப்​-16 போர் விமானத்தை வீழ்த்​திய குரூப் கேப்​டன் அபிநந்தன் வர்த்​த​மான், இந்​திய விமானப்படையில் இருந்து விலகி கோவாவை சேர்ந்த ‘பிளை 91’ என்ற தனி​யார் விமான நிறு​வனத்​தில் இணைந்​துள்​ளார்.

2019 பிப்​ர​வரி 14 புல்​வாமா தாக்​குதலுக்​குப் பதிலடி​யாக, இந்​தியா பாகிஸ்​தானின் பால​கோட் மீது வான்​வழித் தாக்​குதல் நடத்​தி​யது. மறு​நாளே இந்​திய எல்​லைக்​குள் நுழைய முயன்ற பாகிஸ்​தான் போர் விமானங்​களை, அன்​றைய விங் கமாண்​டர் அபினந்​தன் தனது மிக்-21 பைசன் விமானத்​தில் சென்று துணிச்​சலுடன் எதிர்​கொண்​டார்.

தொழில்​நுட்ப ரீதி​யிலும் எண்​ணிக்​கை​யிலும் எதிரி விமானங்​கள் பலமாக இருந்​த​போ​தி​லும், பாகிஸ்​தானின் எப் -16 விமானத்தை அவர் சுட்டு வீழ்த்​தி​னார். இருப்​பினும், எதிரி​யின் ஏவு​கணை தாக்கிய​தால் விமானம் சேதமடைந்​து, அபிநந்​தன் பாகிஸ்​தான் பகு​தி​யில் தரை​யிறங்க நேரிட்​டது.

பாகிஸ்​தான் ராணுவத்​தால் சிறைபிடிக்​கப்​பட்ட அவர், இந்​தி​யா​வின் பலத்த ராஜதந்​திர அழுத்​தங்​கள் காரண​மாக 60 மணி நேரத்​தில் பாது​காப்​பாக மீட்கப்பட்டார்.

அவரது ஒப்​பற்ற வீரத்​தை​யும் தியாகத்​தை​யும் கவுரவிக்​கும் வகையில், இந்​தி​யா​வின் மூன்​றாவது உயரிய போர்க்​கால விருதான ‘வீர் சக்​ரா’ அவருக்கு வழங்​கப்​பட்​டது. பின்​னர் குரூப் கேப்​ட​னாக பதவி உயர்வு பெற்ற அவர், தனது பணிக் காலத்தை நிறைவு செய்​து, நடப்​பாண்டு மார்ச் 31 அன்று இந்​திய விமானப்​படையி​லிருந்து விலகினார்.

பாது​காப்பு அமைச்​சகத்​தின் முறையான ஒப்​புதல் மற்​றும் சான்​றிதழ்​களைப் பெற்ற பிறகு, கோவா​வைத் தளமாகக் கொண்டு இயங்​கும் ‘பிளை 91’ என்ற தனியார் பயணி​கள் விமான நிறு​வனத்​தில் ஆகஸ்ட் மாதம் விமானி​யாக இணைந்​து தனது புதி​ய பயணத்​தைத் தொடங்கியுள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version