திமுக கூட்டணியில் சரியான மரியாதை வழங்கவில்லை: வைகோவுடன் மதிமுக நிர்வாகிகள் வாதம்

0
29

தி​முக கூட்​ட​ணி​யில் சரி​யான மரி​யாதை வழங்​க​வில்லை என்று மதி​முக மாவட்ட செய​லா​ளர்​கள், நிர்​வாகி​கள் வைகோவுடன் வாதிட்​டனர், அவர்​களை வைகோ சமா​தானப்​படுத்​தி​னார்.

மதி​முக நிர்​வாகக்​ குழு கூட்​டம் அவைத் தலை​வர் ஆடிட்​டர் ஆ.அர்​ஜுன​ராஜ் தலை​மை​யில், சென்னை எழும்​பூரில் உள்ள கட்​சி​யின் தலை​மையகத்​தில் நேற்று நடை​பெற்​றது.

இந்த கூட்​டத்​தில் முதல்​வர் விஜய்க்கு வாழ்த்​து, திமுக கூட்​ட​ணிக்​கும், மதி​முக வேட்​பாளர்​களுக்கு வாக்​களித்த மக்​களுக்கு நன்​றி, நீட் தேர்வு ரத்து கோரிக்கை, பி.எம். திட்டத்துக்கு எதிர்ப்பு என்பன உள்ளிட்ட 11 தீர்மானங்​கள் நிறைவேற்​றப்​பட்​டன.

இந்த கூட்​டத்​தில் பேசிய பெரும்​பாலான நிர்​வாகி​கள் கடந்த சட்​டப்​பேரவை தேர்​தலில் திமுக கூட்​ட​ணி​யில் தொகு​தி​கள் ஒதுக்​கிய​தில் பாரபட்​சம் காட்​டப்​பட்​ட​தாக​வும், புதி​தாக வந்​தவர்​களுக்கு அதிக இடம் கொடுக்​கப்​பட்​டது, மதி​முகவை உதயசூரியன் சின்​னத்​தில் நிற்க நிர்​பந்​தித்​தது ஆகிய​வற்​றுக்கு கடும் கண்​டனத்தை பதிவு செய்து விவா​தித்​தாக​வும், இதனிடையே நிர்​வாகி​களை வைகோ சமா​தானப்​படுத்​தி​ய​தாக​வும் கூறப்​படு​கிறது.

குதிரை பேரத்​தில் ஈடு​பட​வில்லை கூட்​டத்​துக்கு பின் செய்​தி​யாளர்​களிடன் வைகோ கூறிய​தாவது: விஜய் குதிரை பேரத்​தில் ஈடு​பட​வில்லை என்​பது என்​னுடைய கருத்​து. அதிமுகவில் ஒரு பிரி​வினர் ஆதரவு கொடுத்​ததை ஏன் விஜய் வேண்​டாம் என சொல்​ல​ப் போகிறார்.

முன்​ன​தாகவே அவருக்கு தேவை​யான இடங்​கள் இருந்​தது. குதிரை பேரம் குறித்து ஒவ்​வொரு தலை​வருக்​கும் ஒரு கருத்து இருக்​கும். என் கருத்து குதிரை பேரம் நடை​பெற​வில்​லை. ஜோதிடருக்கு அரசு நியமனம் திரும்​பப் பெறப்​பட்​டது வரவேற்​கத்​தக்​கது.

இந்த அரசு பொறுப்​பேற்​றதை நாங்​கள் வரவேற்​கிறோம். ஆனால் நாங்​கள் திமுக கூட்​ட​ணி​யில் தான் தொடர்​கிறோம். உதயநிதி ஸ்டா​லின் கருத்து சொல்ல முழு உரிமை​யுள்​ளது அவரின் கருத்​துக்கு நான் பதில் சொல்ல இயலாது.

அதி​முக பிளவா என்​பது பொறுத்​திருந்​தால் தான் தெரி​யும். சசிகலா, டி.டி​வியை சேர்க்​கவேண்​டும் என்ற அதி​முக​வினரின் கருத்​திற்கு நான் பதில் சொல்ல விரும்​ப​வில்​லை.

இவ்​வாறு அவர் கூறி​னார். இந்த கூட்​டத்​தில் முதன்​மைச் செய​லா​ளர் துரை வைகோ, பொருளாளர் மு.செந்​தில​திபன், மதி​முக எம்​எல்​ஏக்​கள் செந்​தில் செல்​வன், தி.​மு. ராஜேந்​திரன், மாவட்​ட செய​லா​ளர்​கள்​ மற்​றும்​ நிர்​வாகி​கள்​ கலந்​து கொண்​டனர்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here