திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை

0
22

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று (அக்.29) காலை முதல் மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர்.

3 பொலிரோ வாகனங்களில் வந்த 15-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்தச் சோதனையைத் தொடங்கினர்.

சோதனை நடக்கும் சமயத்தில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டிற்குள்ளேயே இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனையொட்டி, அவரது வீட்டு வாசலில் திமுகவினர் திரண்டு காத்திருக்கின்றனர்.

அங்கு மட்டுமல்லாது சென்னை மற்றும் தமிழ்நாடு முழுவதும் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள நேரு சகோதரர் ரவிச்சந்திரன் வீடு, அலுவலகத்திலும் சோதனை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக, கடந்த செப்.5-ம் தேதி நேரு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது. அப்போது சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடந்து கொண்டிருந்தது. அதனால், பேரவை நடக்கும்போது எதிர்க்கட்சித் துணைத் தலைவராக உள்ள கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்படுவது தமிழக அரசியலில் பரபரப்பை உருவாக்கியது.

இந்நிலையில் இன்று மீண்டும் சோதனை நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வரும் நவ.16 ஆம் தேதி நேருவின் தம்பி ரவிச்சந்திரன் மகனுக்கு திருமணம் நடைபெற உள்ள நிலையில், இந்த சோதனை அரசியல் வட்டாரத்தையும் தாண்டி அவரது குடும்பத்தினர் மத்தியிலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, தனியார் பள்​ளி​களுக்கு அங்​கீகாரம் பெற்​றுத் தரு​வதாகக் கூறி ரூ.400 கோடி வரை மோசடி செய்​யப்​பட்ட வழக்​கில் திமுக முன்​னாள் அமைச்​சர் அன்​பில் மகேஸ் நேற்று கைது செய்யப்பட்டார். இன்று மற்றொரு திமுக முன்னாள் அமைச்சர் வீட்டில் ரெய்டு நடைபெறுகிறது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here