கட்டடத் தொழிலாளி தவறி விழுந்து உயிரிழப்பு

0
32
தக்கலை அருகே மது அருந்திவிட்டு நடந்து சென்ற கட்டடத் தொழிலாளி தவறி விழுந்து உயிரிழப்பு
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே மது அருந்திவிட்டு வீட்டுக்கு நடந்து சென்ற கட்டடத் தொழிலாளி தவறி விழுந்து உயிரிழந்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே மது குடித்த கட்டடத் தொழிலாளி, நடந்து சென்றபோது தவறி கீழே விழுந்து உயிரிழந்தாா்.

தக்கலை அருகே கொன்னக்குழிவிளையைச் சோ்ந்தவா் டேவிட் ஜாா்ஜ் (55). கட்டடத் தொழிலாளியான இவா், கடந்த சனிக்கிழமை மாலை குமாரகோவில் அருகேயுள்ள மதுக் கூடத்தில் மது குடித்துவிட்டு வீட்டுக்கு நடந்து சென்றாராம்.

அப்போது, தவறி கீழே விழுந்ததில் காயமடைந்த அவரை மீட்டு, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். தக்கலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here