சிஜேபி நிறுவனர் அபிஜித் திப்கே கைது – டெல்லி போராட்டத்தில் நடந்தது என்ன?

0
28

டெல்லியில் நேற்று மூவர்ண கொடியேற்றும் போராட்டத்தில் ஈடுபட முயன்ற சிஜேபி நிறு வனர் அபிஜித் திப்கே கைது செய்யப்பட்டார்.

கடந்த 13-ம் தேதி கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் (சிஜேபி) செய்தித் தொடர்பாளர் சவுரவ் தாஸ், ஒருங்கிணைப்பாளர் அசுதோஷ் ரங்கா ஆகியோர் தேசிய கொடியுடன் ஜந்தர் மந்தரில் தடையை மீறி நுழைந்தனர். இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.

அவர்களை விடுதலை செய்ய வேண்டும். தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி சிஜேபி சார்பில் அக்.16-ம் தேதி மாலை 5 மணிக்கு டெல்லி கனாட்பிளேஸ் மத்திய பூங்காவில் மூவர்ண கொடி ஏற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு டெல்லி போலீஸார் அனுமதி வழங்கவில்லை.

இந்நிலையில், டெல்லி ஜாண்டேவாலன் பகுதியில் தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) செய்தித் தொடர்பாளர் அனிஷ் கவாண்டே வீட்டில் சிஜேபி நிறுவனர் அபிஜித் திப்கே தங்கியிருந்தார். அந்த வீட்டுக்கு நேற்று மதியம் டெல்லி காவல் துறை மூத்த அதிகாரிகள் சென்றனர். போலீஸ் அனுமதியில்லாமல் சட்டவிரோதமாக போராட்டம் நடத்தக்கூடாது என்று காவல் துறை சார்பில் அஜிபித் திப்கேவிடம் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லி கனாட்பிளேஸ் மத்திய பூங்கா பகுதியில் 28,000-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டனர்.

மாலை 5 மணி அளவில் டெல்லி ஜாண்டே வாலன் பகுதி வீட்டில் இருந்து அபிஜித் திப்கே புறப்பட்டார். அவரை போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். சிஜேபி-க்கு ஆதரவாக டெல்லி மண்டி ஹவுஸ் பகுதி யில் அகில இந்திய மாணவர் சங்கத்தின் (ஏஐஎஸ்ஏ) தலைவர் நேஹா போரா தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டது. அங்கு நேஹா கைது செய்யப்பட்டார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here