சினிமா கணிக்க முடியாத விளையாட்டு: ராம்

0
352

ராம் இயக்கத்தில், சிவா, கிரேஸ் ராஜ ஆண்டனி நடித்து கடந்த 4-ம் தேதி வெளியான படம் பறந்து போ. இந்தப் படம் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் இதன் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. கிரேஸ் ஆண்டனி, இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி, எடிட்டர் மதி, பாடலாசிரியர் மதன் கார்க்கி உள்பட படக்குழுவினர் பங்கேற்றனர்.

இயக்குநர் ராம் பேசும்போது, “நிறைவான மகிழ்ச்சியான பயணமாக இந்தப் படம் அமைந்துள்ளது. இந்தப் படம் திரைக்கு வர வேண்டும் என்பதில் என்னைவிட என் உதவி இயக்குநர்கள்தான் ஆர்வமாக இருந்தார்கள்.

சினிமா என்பது கணிக்க முடியாத விளையாட்டு. சமகால தலைமுறையினருடன் இந்தப் படம் மூலம் தொடர்பு கொள்ள முடிந்ததில் மகிழ்ச்சி. சிவா, கிரேஸ் ஆண்டனி, அஞ்சலி மற்றும் என்னுடைய படக்குழுவினர் அனைவருக்கும், என் மீது நம்பிக்கை வைத்து படத்தை வெளியிட்ட ரோமியோ பிக்சர்ஸ் ராகுலுக்கும் நன்றி” என்றார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here