சென்னையில் அக்டோபர் 30-ம் தேதி முதல் தொடங்கவுள்ள முதலாவது சோழா செஸ் ஓபன் சர்வதேச கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் 32 கிராண்ட்மாஸ்டர்கள் உட்பட 80 வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டு விளையாடவுள்ளனர்.
8 நாட்கள் நடைபெறவுள்ள இப்போட்டியில் இந்திய கிராண்ட்மாஸ்டர்கள் சூர்யசேகர் கங்குலி, லியான் லூக் மென்டோன்கா, கிரீஸ் கிராண்ட்மாஸ்டர் டிமிட்ரிஸ் அலெக்சாகிஸ் உள்ளிட்ட 32 கிராண்ட்மாஸ்டர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். இதில் 20 கிராண்ட்மாஸ்டர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். மீதமுள்ள 12 பேர் வெளிநாட்டு வீரர்கள் ஆவர்.
ஃபிடே ரேட்டிங்கில் 2,250 புள்ளிகளுக்கு மேல் பெற்றவர்கள் மட்டுமே இந்தப் போட்டியில் பங்கேற்கவுள்ளனர். இதில் 75 பேர் ஏற்கெனவே ஃபிடே பட்டத்தை வென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
12 செஸ் சம்மேளனனங்களை சேர்ந்தவர்கள் போட்டியில் கலந்துகொண்டு விளையாட உள்ளனர். இதில் 20 முதல் 24 பேர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள்.
இந்தப் போட்டியில் பங்கேற்று புள்ளிகளைப் பெறுவதன் மூலம் கிராண்ட்மாஸ்டர் (ஜிஎம்), சர்வதேச மாஸ்டர் (ஐஎம்), மகளிர் கிராண்ட்மாஸ்டர் (டபிள்யூஜிஎம்), மகளிர் சர்வதேச மாஸ்டர் (டபிள்யூஐஎம்) அந்தஸ்தைப் பெறுவதற்கான வாய்ப்பு வீரர், வீராங்கனைகளுக்கு கிடைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.














