
10 சென்ட் நிலத்தை ரூ.40 லட்சத்துக்கு விற்ற வழக்கறிஞர் அய்யப்பன், ஒரு சர்வே எண்ணை மட்டும் காட்டி ஏமாற்றியதாக புகார்.
- நிலத்தை வாங்கிய தென்காசி அரிகிருஷ்ணன், ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் ராமசந்திரன் மூலம் வனஜா என்பவருக்கு மறுவிற்பனை செய்துள்ளார்.
- இடத்தை காலி செய்ய மறுத்த அய்யப்பன், தனது பெற்றோரை பழைய வீட்டில் குடியமர்த்தி, கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
- இதனால் ஆத்திரமடைந்த ராமசந்திரன் தனது ஆட்களுடன் 22.10.26 அன்று JCB மூலம் வீட்டை இடிக்க முயன்று, அய்யப்பனை மரத்தில் கட்டி வைத்து இடத்தை ஒப்படைக்குமாறு மிரட்டியுள்ளார்.
- இது தொடர்பாக அய்யப்பன் கொடுத்த புகாரில் அஞ்சுகிராமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.













