Home கன்னியாகுமரி செய்திகள் ரூ.40 லட்சம் நிலத் தகராறு: வழக்கறிஞரை மரத்தில் கட்டி மிரட்டியதாக புகார் – அஞ்சுகிராமத்தில் பலர்...

ரூ.40 லட்சம் நிலத் தகராறு: வழக்கறிஞரை மரத்தில் கட்டி மிரட்டியதாக புகார் – அஞ்சுகிராமத்தில் பலர் கைது

0
Writing அஞ்சுகிராமத்தில் 10 சென்ட் நிலம் விற்பனை தொடர்பான தகராறு குறித்து வழக்குப்பதிவு செய்து கைது செய்த போலீசார்
10 சென்ட் நிலத்தை ரூ.40 லட்சத்துக்கு விற்பனை செய்தது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், வழக்கறிஞரை மரத்தில் கட்டி வைத்து மிரட்டியதாக அளிக்கப்பட்ட புகாரில் அஞ்சுகிராமம் போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

10 சென்ட் நிலத்தை ரூ.40 லட்சத்துக்கு விற்ற வழக்கறிஞர் அய்யப்பன், ஒரு சர்வே எண்ணை மட்டும் காட்டி ஏமாற்றியதாக புகார்.

  • நிலத்தை வாங்கிய தென்காசி அரிகிருஷ்ணன், ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் ராமசந்திரன் மூலம் வனஜா என்பவருக்கு மறுவிற்பனை செய்துள்ளார்.
  • இடத்தை காலி செய்ய மறுத்த அய்யப்பன், தனது பெற்றோரை பழைய வீட்டில் குடியமர்த்தி, கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
  • இதனால் ஆத்திரமடைந்த ராமசந்திரன் தனது ஆட்களுடன் 22.10.26 அன்று JCB மூலம் வீட்டை இடிக்க முயன்று, அய்யப்பனை மரத்தில் கட்டி வைத்து இடத்தை ஒப்படைக்குமாறு மிரட்டியுள்ளார்.
  • இது தொடர்பாக அய்யப்பன் கொடுத்த புகாரில் அஞ்சுகிராமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version