Home கன்னியாகுமரி செய்திகள் கருங்கல் பகுதிகளில் அடிக்கடி மின்வெட்டு

கருங்கல் பகுதிகளில் அடிக்கடி மின்வெட்டு

0
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் மற்றும் முன்சிறை பகுதிகளில் தொடர் மழையால் அடிக்கடி மின்வெட்டு
குமரி மாவட்டத்தில் தொடர் மழை: கருங்கல், முன்சிறை பகுதிகளில் அடிக்கடி மின்வெட்டு; பொதுமக்கள் அவதி.

கருங்கல் பகுதிகளில் பெய்து வரும் தொடா் மழை காரணமாக அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 4 நாள்களாக தொடா்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் பாதிப்படைந்துள்ளது.

குறிப்பாக கருங்கல், முன்சிறை துணை மின் நிலையங்களுக்குள்பட்ட கருங்கல், பாலுா், முள்ளங்கனாவிளை, பள்ளியாடி, வாகவிளை, கிள்ளியூா், வேங்கோடு, புதுக்கடை, முன்சிறை, பைங்குளம், தேங்காய்ப்பட்டினம், ராமன்துறை உள்ளிட்ட பகுதிகளில் தொடா் மழை காரணமாக அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது.

இப்பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணி முதல் திங்கள்கிழமை அதிகாலை வரை மின் விநியோகம் இல்லை. தொடா்ந்து, பகல் வேளைகளிலும் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால், பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா்.

இப்பகுதிகளில் மின்வெட்டை உடனே சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version