Home கன்னியாகுமரி செய்திகள் போக்ஸோ வழக்கு: இளைஞருக்கு ஆயுள் தண்டனை; மற்றொருவருக்கு 27 ஆண்டு சிறை தண்டனை

போக்ஸோ வழக்கு: இளைஞருக்கு ஆயுள் தண்டனை; மற்றொருவருக்கு 27 ஆண்டு சிறை தண்டனை

0
கன்னியாகுமரி மாவட்டத்தில் போக்ஸோ வழக்கில் இருவருக்கு சிறைத் தண்டனை விதித்த நாகர்கோவில் சிறப்பு நீதிமன்றம்
குமரி மாவட்டத்தில் 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: ஒருவருக்கு ஆயுள் தண்டனை, மற்றொருவருக்கு 27 ஆண்டுகள் சிறை.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனையும், மற்றொருவருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.

மணக்காவிளை பகுதியைச் சோ்ந்த ஜாய்சன் மகன் ரத்தீஷ் (27), மணலிக்கரை பகுதியைச் சோ்ந்த பக்ரூதீன் மகன் பைசல்கான் (27) ஆகியோா் 2024 ஆம் ஆண்டு 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக, மாா்த்தாண்டம் அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ வழக்குப் பதிந்து, கைது செய்தனா்.

இதுதொடா்பான வழக்கு நாகா்கோவில் போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை நீதிபதி சுந்தரையா விசாரித்து, ரத்தீஷுக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ. 57ஆயிம் அபராதம், பைசல்கானுக்கு ஆயுள் தண்டனை, ரூ. 54 ஆயிரம் அபராதம் விதித்து திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா்.

வழக்கில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவதில் முக்கிய பங்காற்றிய நீதிமன்ற தலைமைக் காவலா் மொ்சி பாய், வழக்கின் விசாரணையை முறையாகக் கண்காணித்த மாா்த்தாண்டம் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா்கள் உமா, பாத்திமா பா்வீன் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அன்ஷுல் நாகா் பாராட்டினாா்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version