Home கன்னியாகுமரி செய்திகள் கன்னியாகுமரி மாவட்டம்பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் பயங்கரம்: வழக்கு விசாரணைக்கு வந்த மனைவியை அரிவாளால் வெட்டிய கணவன்;

கன்னியாகுமரி மாவட்டம்பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் பயங்கரம்: வழக்கு விசாரணைக்கு வந்த மனைவியை அரிவாளால் வெட்டிய கணவன்;

0
தக்கலை குடும்ப நல நீதிமன்றம் அருகே மனைவியை அரிவாளால் வெட்டிய கணவர்
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு விசாரணைக்காக வந்த பெண்ணை அவரது கணவரே அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை குடும்ப நல நீதிமன்றத்தில் ஆஜராக வந்த பெண்ணை அவரது கணவரே அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் மேக்காமண்டபம் இத்தவளைப் பகுதியைச் சேர்ந்தவர் வின்சென்ட் ராஜ் (கூலித் தொழிலாளி). இவருக்கும் பொன்மனை கிராமத்தைச் சேர்ந்த ஜெர்லின் பிரேமா என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஜெர்லின் பிரேமா ஒரு கடையில் வேலை பார்த்து வந்த நிலையில், கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, கணவரை பிரிந்து கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வாழ்ந்து வந்த ஜெர்லின் பிரேமா, விவாகரத்து கோரி தக்கலை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணைக்காக இன்று காலை நீதிமன்றத்திற்கு ஜெர்லின் பிரேமா வந்துள்ளார். அப்போது நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே நின்று கொண்டிருந்த வின்சென்ட் ராஜ், திடீரென ஜெர்லின் பிரேமாவை வழிமறித்து தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version