நாகர்கோவிலில் போக்குவரத்து விதியை மீறிய சிற்றுந்துகள் பறிமுதல்

0
483

நாகர்கோவில் போக்குவரத்து ஒழுங்குப் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வில்லியம் பெஞ்சமின் தலைமையில் போலீசார் நேற்றுமுன்தினம் கோட்டார் ரெயில் நிலையம் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு மினிபஸ் நின்றுகொண்டிருந்தது. சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் அந்த மினிபஸ் ஆவணங்களை ஆய்வு செய்தனர். 

அப்போது அந்த மினிபஸ் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தை மீறி மாற்று வழித்தடத்தில் இயங்கியது தெரியவந்தது. இதையடுத்து மினிபஸ்சை போலீசார் பறிமுதல் செய்து ரூ. 500 அபராதம் விதித்தனர். இதேபோல் வடசேரி பகுதியில் இன்சூரன்ஸ் இல்லாமல் இயங்கிவந்த மினிபஸ்சையும் போலீசார் பறிமுதல் செய்து ரூ. 2 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here