ஸ்டாலினின் தியாகத்தை கொச்சைப்படுத்துகிறார் முதல்வர் விஜய்: திமுக கடும் விமர்சனம்

0
16

‘மிசாவில் கைது செய்யப்பட்ட மு.க.ஸ்டாலினின் தியாகத்தை முதல்வர் விஜய் கொச்சைப்படுத்துகிறார்’ என்று திமுக எம்எல்ஏக்கள் விமர்சித்துள்ளனர்.

சட்டப்பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் நேற்று வெளியேற்றப்பட்டனர். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் திமுக கொறடா எ.வ.வேலு கூறியதாவது: தமிழகத்தில் கடந்த 116 நாட்களில் 200 கொலைகள், 300-க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமைகள், 8 காவல் மரணங்கள் என மொத்தம் 550 குற்றங்கள் நடைபெற்றுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் சட்டப்பேரவையில் புள்ளிவிவரங்களுடன் ஆதாரங்

களை முன்வைத்தார்.

இதற்கு முதல்வர் உரிய முறையில் பதிலளிப்பார் என்று எதிர்பார்த்தோம். ஆனால், இதுகுறித்து அவர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. சட்டப்பேரவை விதி 92-ன் படி, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒரு வழக்கை சபையில் விவாதிக்கக் கூடாது.

ஆனால், முதல்வர் அதனை மீறி அமலாக்கத்துறை தொடர்பான பிரமாணப் பத்திரத்தை வாசித்தார். மேலும், ‘மிசா’ போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் உடல் அசைவுகளைச் செய்து நடித்தார்.

‘மிசா’ கைது பற்றி பேசி எங்கள் தலைவரின் தியாகத்தை கொச்சைப்படுத்தி உள்ளார். அதே போல், நிரூபிக்கப்படாமல் கைவிடப்பட்ட சர்க்காரியா கமிஷன் விவகாரத்தை மீண்டும் முதல்வர் கிளப்பியுள்ளார்.

முரசொலி மாறனின் புகழுக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் அவர் பேசியது கண்டிக்கத்தக்கது. மாறனின் குடும்பத்திடம் பணம் வாங்கிக்கொண்டு திரைப்படத்தில் நடித்தவர் விஜய்.

டெல்லியில் மாறனின் தபால் தலையை வெளியிட்ட அதே விஜய், இன்று அவரை இழிவுபடுத்துவது ஏன்? முதல்வர் பேசிய அவதூறான கருத்துகளையும், விதிமீறல்களையும் அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று பேரவைத் தலைவரிடம் கோரிக்கை விடுத்தோம்.

ஆனால், அவர் மறுத்துவிட்டார். மாறாக, காவல்துறையை ஏவி எங்களை அராஜகமான முறையில் வெளியேற்றினார்கள். இது சர்வாதி காரத்தின் உச்சம். திமுகவின் ‘திராவிட மாடல்’ என்பது ரியல் ஆட்சி. ஆனால் தற்போது நடப்பது வெறும் ‘ரீல்’ ஆட்சி. இவ்வாறு அவர் கூறினார்.

முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு பேசும்போது, ‘‘திமுக மீது பழி சுமத்துவதைத் தவிர அவர்களுக்குப் பேசுவதற்கு புதிய விஷயங்கள் ஏதும் இல்லை. அதனால் தான் காலாவதியான பழைய சர்க்காரியாகமிஷன் போன்ற விவகாரங்களை எடுத்துப் பேசுகிறார்கள்’’ என்றார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here