751 உதவி மருத்துவர்கள், 1,393 சுகாதார ஆய்வாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் விஜய் வழங்கினார்

0
26

அரசு மருத்​து​வ​மனை​களின் மேம்​பாட்​டுக்கு நன்​கொடை பெறும் வகை​யில் ‘நலம் TN’ என்ற இணை​யதளத்தை தொடங்கி வைத்த முதல்​வர் விஜய், மருத்​துவ பணி​யாளர் தேர்வு வாரி​யத்​தால் தேர்ந்​தெடுக்​கப்​பட்ட 751 உதவி மருத்​து​வர்​கள், 1,393 சுகா​தார ஆய்​வாளர்​களுக்கு பணிநியமன ஆணை​களை வழங்​கி​னார்.

தமிழக சுகா​தா​ரத்​துறை சார்​பில், தமிழ்​நாடு சுகா​தார அறக்​கட்​டளை வழி​யாக அரசு மருத்​து​வ​மனை மேம்​பாட்​டுக்கு அறக்​கட்​டளை மற்​றும் சமூகப் பொறுப்பு நிதி வழங்​கும் வகை​யில் ‘நலம் TN’ (www.tnhealthfoundation.org) என்ற புதிய இணை​யதளத்​தை தொடங்கி வைக்​கும் நிகழ்ச்சி சென்னை மாநிலக் கல்​லூரி வளாகத்​தில் நேற்று நடந்​தது.

இதில் பங்​கேற்ற முதல்​வர் விஜய், இணை​யதளத்தை தொடங்கி வைத்​தார். இந்​நிகழ்ச்​சி​யில் சுகா​தா​ரத்​துறை அமைச்​சர் அருண்​ராஜ் பேசும்​போது, “தமிழகத்​தின் 38 மாவட்​டங்​களில் உள்ள அனைத்து அரசு மருத்​து​வ​மனை​களி​லும் உயர் சிறப்பு சிகிச்​சைகள் வழங்​குதற்​காக, உள்​கட்​டமைப்பு மற்​றும் உயர்தர மருத்​துவ உபகரணங்​களை மேம்​படுத்​தும் நோக்​கில், பெரிய தொழில் நிறு​வனங்​கள், பெருநிறு​வனங்​களின் சமூகப் பொறுப்பு நிதி மற்​றும் தொண்டு நிறு​வனங்​கள், முன்​னாள் மருத்​து​வக் கல்​லூரி மாணவர்​கள், தனிப்​பட்ட நன்​கொடை​யாளர்​கள் ஆகியோரிட​மிருந்து நன்​கொடை பெற்று வெளிப்​படை​யான முறை​யில் செயல்​படுத்​து​வதற்​காக, தமிழ்​நாடு சுகா​தாரதிட்​டத்​தின் கட்​டமைப்​பின்​கீழ் இணை​யதளம் வடிவ​மைக்​கப்​பட்​டுள்​ளது.

இந்த இணை​யதளம் மூலம் உங்​களுக்கு விருப்​ப​மான அரசு மருத்​து​வ​மனைக்கு நன்​கொடை வழங்க முடி​யும்” என்றார்.

இந்த நிகழ்​வில் அரசு மருத்​துவ கல்​லூரி​களின் பயன்​பாட்​டுக்​காக சென்​னை​யிலுள்ள கேப்​ளின் பாய்ன்ட் லெபாரட்​டரீஸ், அப்​போலோ மருத்​து​வ​மனை குழு​மத்​தினர் சமூக பொறுப்பு நிதி​யில் இருந்து தலா ரூ.1 கோடிக்​கான காசோலை மற்​றும் ஓசூரிலுள்ள டைட்​டன் இன்​ஜினீயரிங் அண்டு ஆட்​டோமேஷன் நிறு​வனத்​தினர் சமூக பொறுப்பு நிதி​யில் இருந்து ரூ.60 லட்​சத்​துக்​கான காசோலையை முதல்​வரிடம் வழங்​கினர்.

சென்​னையைச் சேர்ந்த எஸ்​.சத்யா என்​பவர், 2 ஆண்​டு​களுக்கு முன்பு எழும்​பூர் தாய்​சேய் நல மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டார். அவருக்கு சுகப்​பிரசவத்​தில் பெண் குழந்தை பிறந்​த​போது அம்​மருத்​து​வ​மனை​யின் மருத்​து​வர்​கள், செவிலியர்​கள் மற்​றும் மருத்​துவபணி​யாளர்​கள் தாயை​யும், குழந்​தையை​யும் அன்​போடும் கவனித்து கொண்​டனர்.

அவர்​களுக்கு நன்றி தெரிவிக்​கும் வித​மாக ‘நலம் TN’ திட்​டத்​தில் அம்​மருத்​து​வ​மனை​யின் சில்லறை செல​வினங்​களுக்​காக க்யூஆர் கோடு மூல​மாக ஆயிரம் ரூபாயை நன்​கொடை​யாக முதல்​வர் முன்​னிலை​யில் சத்யா வழங்​கி​னார்.

கட்​டிடங்​கள் திறப்பு

அதைத்​தொடர்ந்​து, தமிழகம் முழு​வதும் ரூ.139 கோடியே 47 லட்​சத்​தில் கட்​டப்​பட்​டுள்ள மருத்​து​வக் கட்​டிடங்​களை முதல்​வர் விஜய் திறந்​து​வைத்​து, நவீன மருத்துவ உபகரணங்​களின் பயன்​பாட்​டினை​யும் தொடங்கி வைத்​தார்.

மேலும், மருத்​துவ பணி​யாளர் தேர்வு வாரி​யத்​தால் தேர்ந்​தெடுக்​கப்​பட்ட 751 உதவி மருத்​து​வர்​கள் மற்​றும் 1,393 சுகா​தார ஆய்​வாளர்​களுக்கு (நிலை–2) பணிநியமன ஆணை​களை முதல்​வர் விஜய் வழங்​கி​னார்.

முதல் பணிநியமன ஆணை​யை, மேடை​யில் இருந்து கீழே இறங்கிச் சென்று மாற்​றுத்திற​னாளி பெண் மருத்​து​வருக்கு வழங்​கி​னார்.

இறு​தி​யாக பணிநியமன ஆணை பெற்​றவர்​களு​டன் முதல்​வர் விஜய், குழு புகைப்​படம் மற்​றும் செல்​போனில் செல்ஃபி எடுத்து கொண்​டார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here