125 நாள் வேலை திட்டத்தில் மாற்றங்கள் தேவை: மாநில அரசுக்கு ரூ.5,000 கோடி கூடுதல் நிதிச் சுமை – பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்

0
22

மாநில அரசுக்கு ரூ.5 ஆயிரம் கோடி வரை கூடு​தல் நிதிச்​சுமை ஏற்​படு​வ​தால், விபி-ஜி​ராம்ஜி திட்​டத்​தில் ஊதி​யம், நிர்​வாக செல​வு​களுக்​கான மத்​திய அரசின் 100% நிதி தொடர்​வது உள்​ளிட்ட மாற்​றங்​களை செய்ய வேண்​டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்​வர் விஜய் கடிதம் எழு​தி​யுள்​ளார்.

நாடு முழு​வதும் கிராமப்​புற மக்​களுக்கு வாழ்​வா​தா​ரத்தை ஏற்​படுத்தி தரும் வகை​யில் 100 நாள் வேலை​வாய்ப்பு திட்​ட​மான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்​டம் மத்​திய அரசால் செயல்​படுத்​தப்​பட்டு வந்​தது. இதற்கு மாற்​றாக, சில மாறு​தல்​களு​டன் வளர்ச்​சி​யடைந்த பாரதம் – கிராம வேலை உறுதி மற்​றும் வாழ்​வா​தா​ரத் திட்​டம் (விபி-ஜி ராம் ஜி) என்ற புதிய திட்​டத்தை மத்​திய அரசு கொண்டு வந்​தது. இதன்​மூலம் 125 நாட்​கள் வேலை கிடைக்​கும். இந்த திட்​டம் தமிழ கம் உட்பட நாடு முழுவதும் நேற்று அமலுக்கு வந்​துள்​ளது.

இந்த திட்​டத்தை தமிழகத்​தில் செயல்​படுத்த ரூ.12,642 கோடி நிதி ஒதுக்​கப்​பட்​டுள்​ளது. இதில் மத்​திய அரசின் பங்​களிப்​புத் தொகை ரூ.7,585 கோடி ஆகும்.

இந்​நிலை​யில், இத்​திட்​டம் தொடர்​பாக பிரதமர் மோடிக்கு முதல்​வர் விஜய் கடிதம் எழு​தி​யுள்​ளார். அதில் முதல்​வர் கூறி​யுள்​ள​தாவது:

விபி-ஜி​ராம்ஜி திட்​டத்​தின் நிதிப் பகிர்வு முறை மற்​றும் செயல்​பாட்​டுக் கட்​டுப்​பாடு​கள், மாநில அரசுக்கு ரூ.5 ஆயிரம் கோடிக்​கும் அதி​க​மாக கூடு​தல் நிதிச் சுமை​யை​யும், செயல்​பாட்டு ரீதி​யான தாக்​கங்​களை​யும் ஏற்​படுத்​தும். இருந்​தா​லும், இத்​திட்ட விதி​களில் முக்​கிய மாற்​றங்​கள், தளர்​வு​கள் அவசி​ய​மாகின்​றன. அவ்​வாறு செய்​யா​விட்​டால், திட்​டத்தை கள அளவில் தடை​யின்​றி, திறம்பட செயல்​படுத்​து​வது பெரும் பாதிப்பை ஏற்​படுத்​தும். அத்​துடன் கிராமப்​புற வேலை​வாய்ப்​புத் திட்​டத்​தைச் சார்ந்​துள்ள கிராமப்​புற மக்​களை​யும் இது பாதிக்​கும்.

மேலும், நிதிப் பகிர்வு முறையைப் பொருத்​தவரை, தற்​போதைய வழி​காட்​டு​தல்​களின்​படி ஊதி​யம், கட்​டு​மானப் பொருட்​கள், நிர்​வாகச் செல​வு​கள் ஆகிய அனைத்​துக்​கும் மத்​திய, மாநில அரசுகள் இடையே 60:40 என்ற வீதத்தை கட்​டாய​மாக்​கு​கின்​றன. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறு​தித் திட்​டம் கடந்த 2 தசாப்​தங்​களாக வேறு​பட்ட ஒரு கட்​டமைப்​பின் கீழ் செயல்​பட்டு வந்த நிலை​யில், இந்த மாற்​றம் மாநில கரு​வூலத்​துக்கு பெரும் நிதிச் சுமையை ஏற்​படுத்​துகிறது.

இதனால், ஊதி​யம், வேலை நாட்​கள் குறைய வாய்ப்புள்​ளது. பிற அத்​தி​யா​வசிய நலத் திட்​டங்​களுக்​கான நிதி ஒதுக்​கீடும் குறையக்​கூடும். எனவே, ஊதிய, நிர்​வாகச் செல​வு​களைப் பொருத்​தவரை​யில் மத்​திய அரசின் 100 சதவீத நிதி​யுத​வி தொடர வேண்​டும். கட்​டு​மானப் பொருட்​கள் கூறுகளை மத்​திய, மாநில அரசுகள் இடையே 75:25 என்ற வீதத்​தில் பகிர்ந்​து​கொள்ள வேண்​டும்.

இத்​திட்​டத்​தில் கிராம ஊராட்​சிகளை வகைப்​படுத்​த​வும், மாநில அளவி​லான நிதி ஒதுக்​கீட்​டைப் பகிர்ந்​தளிக்​க​வும் முன்​மொழிந்​துள்ள மத்​திய அளவி​லான வழி​முறை​களில், மிக நுட்​ப​மான நிர்​வாக மேலாண்​மை​யைக் கொண்டு வரு​வதுடன், நாடு முழு​மைக்​கும் ஒரே​மா​திரி​யான கணக்​கீடு அடிப்​படையி​லான அணுகு​முறை என்​பது சம்​பந்​தப்​பட்ட மாநிலத்​தின் உள்​ளூர் மற்​றும் கள அளவி​லான தேவை​களின் அடிப்​படை​யில், நிதிப் பகிர்​வுக்​கென தனிப்​பட்ட வழி​முறையை உரு​வாக்க மாநில அரசுகளுக்கு அனு​மதி வழங்க வேண்​டும்.

இச்​சட்​டம், ஒவ்​வொரு நிதி ஆண்​டிலும் முதன்மை விதைப்பு மற்​றும் அறு​வடைக் காலங்​களை உள்​ளடக்​கிய 60 நாட்​களை மாநில அரசு நிலை​யான​தாக அறிவிக்க வேண்​டும். அந்த கால​கட்​டத்​தில் பணி​கள் தற்​காலிக​மாக நிறுத்​து​வதை கட்​டாய​மாக்க வேண்​டும். ‘எல் நினோ’ போன்ற எதிர்​பா​ராத காலங்​களில் உள்​ளூர் நிலை​மை​களுக்கு ஏற்ப இந்த 60 நாட்​கள் முதன்​மைப் பரு​வத்தை அந்​தந்த மாவட்ட ஆட்​சி​யர்​களே மாற்றி அறி​விப்​ப​தற்​கான அதி​காரத்தை பரவலாக்க வேண்​டும்.

விபி- ஜிராம்ஜி கட்​டமைப்​பின் கீழ் மாநில வீட்​டு​வச​தித் திட்டங்களை​யும் சேர்த்​து, இந்​நலத்​திட்ட இலக்​கு​களை கணிசமாக விரைவுபடுத்​தி, அனை​வருக்​கும் வீடு கிடைப்​பதை உறுதி செய்ய வேண்​டும்.

இதில் ஒவ்​வொரு மத்​திய, மாநில அல்​லது உள்​ளூர் திட்​டங்​களும் மத்​திய அரசால் தனித்​தனி​யாக அறிவிக்​கப்பட வேண்​டும். திட்​டங்​களை ஒருங்​கிணைக்​கும் அறி​விப்பு மற்​றும் ஒப்​புதல் அளிக்​கும் அதி​காரத்தை மாநில அரசுகளுக்கே வழங்​கு​வது, மிக​வும் பயனுள்​ள​தாக​ அமை​யும்.

மகாத்மா காந்​தி​யின் மாண்​பைப் போற்​றும் வகை​யில், அவரது பெயரிலேயே இத்​திட்​டத்தை தொடர்ந்து செயல்​படுத்த வேண்​டும்.

ஊரக வேலை உறுதித் திட்​டங்​களைச் செயல்​படுத்​து​வ​தில் தமிழகம் தொடர்ந்து தேசிய அளவில் முன்​னோடி​யாகத் திகழ்ந்து வரு​கிறது. இந்த முக்​கிய மாற்​றங்​களு​டன், இத்​திட்​டத்தை மேலும் சிறப்​பாக தொலைநோக்​குடன், அதி​களவு உள்​ளூர் மக்​கள் பயன்​பெறும் வகை​யிலும், கிராமப்​புற மேம்​பாட்​டில் தீவிர கவனத்​துட​னும் செயல்​படுத்த முடி​யும். இந்​த முன்​மொழி​வு​களை பரிசீலிக்​க வேண்​டும். இவ்​வாறு கடிதத்​தில்​ முதல்​வர்​ தெரிவித்​துள்​ளார்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here