Google search engine
‘வா வாத்தியார்’ பிரச்சினைக்கு முடிவு எட்டப்பட்டு ஜனவரி 14-ம் தேதி வெளியிடும் வகையில் வெளியீட்டுப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வா வாத்தியார்’. சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கினால் இப்படம் வெளியாகாமல் இருந்தது. ரூ.21 கோடி செலுத்திவிட்டு படத்தினை வெளியிடலாம் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனால், இப்படம் எப்போது வெளியாகும் என்பது தெரியாமல் இருந்தது. தற்போது தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா இப்பணத்தினை தயார் செய்துவிட்டார் என்கிறார்கள். இதனாலேயே...
‘ஜனநாயகன்’ வெளியீடு இல்லை என்பது உறுதியானதால், பொங்கல் வெளியீட்டுக்கு பல்வேறு படங்கள் தங்களது வெளியீட்டை உறுதிப்படுத்தி வருகின்றன. ஜனவரி 9-ம் தேதி வெளியாக இருந்த படம் ‘ஜனநாயகன்’. தணிக்கையில் ஏற்பட்ட பிரச்சினையினால் தற்போது இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கிறது. எப்போது வெளியாகும் என்பது தெரியாமல் இருக்கிறது. ஆனால், பொங்கல் வெளியீடு சாத்தியமில்லை என்பது மட்டும் உறுதியாகிவிட்டது. இதனால், பல்வேறு படங்கள் ஜனவரி 14 மற்றும் 15-ம் தேதிகள் வெளியாக இருக்கின்றன. கார்த்தி...
விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ திரைப்​படம் தணிக்கை சான்றிதழ் பிரச்​சினை​யால்​வெளி​யாக​வில்​லை. இந்​தப் படத்​தைப் பொங்​கலுக்கு வெளி​யிடும் முயற்​சி​யில், படத்தின்​ த​யாரிப்​பாளர் சார்​பில் உச்ச நீதி​மன்​றத்​தில் மேல் முறை​யீடு செய்​யப்​பட்​டுள்​ளது. அப்​படம் வெளியாகுமா, ஆகாதா என்ற நிலையில், விஜய் நடித்து வெற்றி பெற்ற பழைய திரைப்​படங்​களை ரீரிலிஸ் செய்ய சில தயாரிப்பாளர்​கள் முயன்று வந்​தனர். இந்​நிலை​யில் விஜய் நடித்து சூப்​பர் ஹிட்​டான ‘தெறி’ படத்தைப் பொங்​கலுக்கு மறு​வெளி​யீடு செய்வ​தாகத் தயாரிப்​பாளர் கலைப்​புலி எஸ் தாணு அறி​வித்​துள்​ளார். அட்லி...
தனுஷின் ‘மரி​யான்’ படப்​பிடிப்​பில் தான் மோச​மான அனுபவத்தைச் சந்​தித்​த​தாக நடிகை பார்வதி தெரிவித்துள்​ளார். மலை​யாள நடிகை​யான பார்​வ​தி, தமிழில் வெளி​யான ‘பூ’, ‘மரியான்’, உத்​தம வில்லன்’, ‘தங்​கலான்’ உள்பட சில தமிழ்ப் படங்களில் நடித்​துள்​ளார். அவர் சமீபத்​தில் அளித்​துள்ள பேட்டியில், தனுஷின் ‘மரி​யான்’ பட ஷூட்​டிங்​கின் போது தன்னை உடை மாற்ற அனுமதிக்க​வில்லை என்று வருத்​தத்துடன் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் அளித்​துள்ள பேட்​டி​யில், “’மரி​யான்’ படத்தின் ஒரு காட்​சி​யில் தண்​ணீரில் முழுவதுமாக...
உங்கள் படம் வரும் தேதியே பொங்கல் தொடங்கும் என்று விஜய்க்கு ஆதரவாக குரல் எழுப்பியிருக்கிறார் ரவி மோகன். ‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கையில் ஏற்பட்ட பிரச்சினையால் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் விஜய்க்கு ஆதரவாக பலரும் குரல் கொடுத்து வருகிறார்கள். இந்த விவகாரம் தொடர்பாக ரவி மோகன் தனது எக்ஸ் தளத்தில், “மனம் நொறுங்கிவிட்டது விஜய் அண்ணா.. ஒரு தம்பியாக, உங்களுக்குப் பக்கபலமாக நிற்கும் கோடிக்கணக்கான தம்பிகளில் நானும் ஒருவன். உங்கள் படங்களுக்கு...
சினிமாவுக்கு இது கடினமான காலம் என்று திரைத்துறை பிரச்சினைகளை முன்வைத்து கார்த்திக் சுப்பராஜ் கருத்து தெரிவித்துள்ளார். ‘சல்லியர்கள்’ படத்துக்கு திரையரங்குகள் கிடைக்கவில்லை, ‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கையில் பிரச்சினை உள்ளிட்டவற்றை வைத்து தனது எண்ணங்களை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ். அப்பதிவில், “குறைந்த பட்ஜெட் கொண்ட சுயாதீனப் படமான ’சல்லியர்கள்’ படத்திற்கு திரையரங்குகள் கிடைக்கவில்லை. நாளை வெளியாகவிருந்த விஜய் சார் போன்ற ஒரு பெரிய நடிகரின், பெரிய பொருட்செலவில் உருவாக்கப்பட்ட...
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, லீலா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம், ‘பராசக்தி’. டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ள இப்படம், ஜன.10-ல் வெளியாகிறது. படம் பற்றி நடிகர் அதர்வா முரளி கூறும்போது, “தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தான் ‘பராசக்தி’கதையையும் அதில் என் கதாபாத்திரம் குறித்தும் முதலில் சொன்னார். என் மீது நம்பிக்கை வைத்து இத்தகைய வலுவான கதாபாத்திரத்தைக் கொடுத்ததற்கு நன்றி. ரவி...
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, லீலா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம், ‘பராசக்தி’. டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ள இப்படம், ஜன.10-ல் வெளியாகிறது. இப்படம் குறித்து இயக்குநர் சுதா கொங்கரா பகிர்ந்து கொண்டதாவது, “‘பராசக்தி’ கதை நான் எழுதிய பின்பு பாராட்டுகளை பெற்ற அதேசமயம் கதையை சுற்றி பல சந்தேகங்களும் எழுந்தது. திரைக்கதை உருவாக்கமே கடினமாக இருந்தது. இந்தக் கதையை படமாக்குவது...
‘கே.ஜி.எஃப்’ திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, கன்னட நடிகர் யஷ் நடித்து வரும் திரைப்படம் ‘டாக்ஸிக்’. கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தின் மீது ஆரம்பத்திலிருந்தே மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், இன்று வெளியான இந்தப் படத்தின் அறிமுக வீடியோ, எதிர்பாராத சில சர்ச்சைகளில் சிக்கியுள்ளது. இரண்டரை நிமிடம் ஓடக்கூடிய இந்த வீடியோவின் தொடக்கத்தில் ஒரு மயானத்தில் சில வெளிநாட்டவர்கள் ஒரு இறுதிச் சடங்கு நிகழ்வில் பங்கேற்றுள்ளனர். அங்கு...
ஹெச்​.​வினோத் இயக்​கத்​தில் விஜய், பூஜா ஹெக்​டே, மமிதா பைஜூ, பாபி தியோல் உள்​ளிட்​டோர் நடித்​துள்ள திரைப்​படம், ‘ஜன​நாயகன்’. கேவிஎன் புரொடக் ஷன்ஸ் தயாரித்​துள்ள இப்​படம் ஜன.9 அன்று திரை​யிட திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. ஆனால் இப்​படத்​துக்கு இன்​னும் தணிக்கை சான்​றிதழ் வழங்​க​வில்லை என்​ப​தால் உடனடி​யாக வழங்​கக்​கோரி தயாரிப்பு நிறு​வனம் தரப்​பி்ல் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்​குத் தொடரப்​பட்​டது. இந்த வழக்கு விசா​ரணை நீதிபதி பி.டி.ஆஷா முன்பு நேற்று வந்​தது. தயாரிப்பு நிறு​வனம் தரப்​பி்ல் மூத்த வழக்​கறிஞர்...