இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் இடையே முதன்முறையாக கடந்த 1887-ம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்பர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலிய அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில் இரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் 150-வது வருட கொண்டாட்டத்தையொட்டி பகலிரவு டெஸ்ட் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி வரும் 2027-ம் ஆண்டு மார்ச் 11 முதல் 15-ம்...
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் கோப்பையைக் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் ரோஹித்தை கிண்டல் செய்த காங்கிரஸ் கட்சிக்கு சமூக வலைதளங்களில் பாஜக பதிலடி கொடுத்துள்ளது.
துபாயில் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 12 ஆண்டுகளுக்குப் பின்னர் சாம்பியன் பட்டம் வென்றது. துபாயில் நேற்று முன்தினம் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்தியாவும், நியூஸிலாந்தும் மோதின. டாஸ் வென்று முதலில்...
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்தை வீழ்த்தி 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. 252 ரன்கள் இலக்கை இந்திய அணி துரத்திய நிலையில் கேப்டன் ரோஹித் சர்மா 76 ரன்கள் விளாசி அணியின் வெற்றியில் முக்கிய பங்குவகித்தார். இறுதிப் போட்டிக்கு பின்னர் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் ரோஹித் சர்மா கூறியதாவது:
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து நான்...
8 அணிகள் கலந்து கொண்ட ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து அணியை வீழ்த்தி ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்றது. 76 ரன்கள் விளாசி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்த ரோஹித் சர்மா ஆட்ட நாயகனாகவும், நியூஸிலாந்து அணியின் ரச்சின் ரவீந்திரா (ரன்கள் 263, விக்கெட்கள் 3) தொடர் நாயகனாகவும் தேர்வானார்கள்.
இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி 2025 அணியை ஐசிசி...
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நியூஸிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. 3-வது முறையாக இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றதில் அணியில் உள்ள அனைத்து வீரர்களின் பங்களிப்பும் இருந்தது. லீக் சுற்றில் இருந்து இறுதிப் போட்டி வரை வெவ்வேறு கட்டத்தில் பேட்டிங்கிலும், பந்து வீச்சிலும் இந்திய அணி வீரர்கள் மேம்பட்ட செயல் திறனை வெளிப்படுத்தினர்.
பேட்டிங்கை பொறுத்தவரையில் ஸ்ரேயஸ் ஐயர் முக்கியமான தருணங்கள் அனைத்திலும்...
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் நியூஸிலாந்து அணியை 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 12 வருடங்களுக்குப் பிறகு சாம்பியன் பட்டம் வென்றது இந்திய அணி.
துபாயில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் டாஸ் வென்று நியூஸிலாந்து அணி பேட்டிங் செய்தது. அந்த அணியில் காயம் அடைந்த மேட் ஹென்றிக்கு பதிலாக நேதன் ஸ்மித் களமிறங்கினார். பேட்டிங்கை தொடங்கிய நியூஸிலாந்து அணிக்கு வில் யங், ரச்சின் ரவீந்திரா ஜோடி சிறந்த...
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து அணியை 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 12 வருடங்களுக்குப் பிறகு சாம்பியன் பட்டம் வென்றது இந்திய அணி. இந்தப் போட்டியில் பதிவான சுவாரஸ்யங்கள் இங்கே…
டாஸ் தோல்வியில் சமன்: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டாஸில் தோல்வி அடைந்தார். தொடர்ச்சியாக அவர், டாஸை இழப்பது இது 12-வது...
இந்தியா-நியூஸிலாந்து அணிகள் மோதிய சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ரூ.5 ஆயிரம் கோடி அளவுக்கு சூதாட்டம் நடந்ததாக தெரியவந்துள்ளது.
வழக்கமாக கிரிக்கெட் இறுதிப் போட்டிகள் நடைபெறும்போது சூதாட்டங்களில் தரகர்கள் ஈடுபடுவது வழக்கம். அதன்படி துபாயில் நடைபெற்ற இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியின்போது அதிக அளவில் சூதாட்டங்கள் நடைபெற்றதாகத் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக என்டிடிவி வெளியிட்டுள்ள செய்தியில், நிழல் உலக தாதாக்கள் முதல் தொழிலதிபர்கள் வரை இந்த சர்வதேச...
துபாயில் இன்று (மார்ச் 4) நடைபெறும் அரை இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரரான டிராவிஸ் ஹெட்டை இந்திய அணி சமாளிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில், இந்திய அணிக்கு எதிராக அவரது கடந்த கால செயல்பாடு அப்படியானதாக அமைந்துள்ளது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அதன் நாக்-அவுட் கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா - ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா - நியூஸிலாந்து அணிகள் அரை இறுதிக்கு முன்னேறியுள்ளன....
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி. துபாயில் நேற்று நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தில் டாஸ் வென்று ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்தது. அந்த அணியில் மேத்யூ ஷார்ட், ஸ்பென்சர் ஜான்சன் ஆகியோருக்கு பதிலாக கூப்பர் கானொலி, தன்வீர் சங்கா ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.
ஆட்டத்தின் முதல் பந்தை இந்தியாவின் முகமது...










