ஆல் இந்தியா புச்சி பாபு கிரிக்கெட் தொடர் சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள டிஎன்சிஏ பிரெசிடெண்ட் லெவன் - இமாச்சல பிரதேசம் அணிகள் இடையிலான ஆட்டம் செங்குன்றத்தில் உள்ள கோஜன் ‘ஏ’ மைதானத்தில் நடைபெற்றது. இதன் முதல் இன்னிங்ஸில் டிஎன்சிஏ பிரெசிடெண்ட் லெவன் 274 ரன்களும், இமாச்சல பிரதேசம் 214 ரன்களும் எடுத்தன.
60 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய டிஎன்சிஏ பிரெசிடெண்ட்...
ஆடவர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் வரும் 24-ம் தேதி முதல் செப்டம்பர் 7-ம் தேதி வரை பிஹார் மாநிலம் ராஜ்கிரில் நடைபெறுகிறது. 8 அணிகள் கலந்து கொள்ளும் இந்தத் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணி வரும் 2026-ம் ஆண்டு ஆகஸ்டில் பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில் நடைபெறும் உலகக் கோப்பை ஹாக்கி தொடருக்கு நேரடியாக தகுதி பெறும்.
இதனால் ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது....
ஒருநாள் கிரிக்கெட் போட்டி பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது. இதில் தென் ஆப்பிரிக்க அணியின் சுழற்பந்து வீச்சாளரான கேசவ் மகராஜ் முதலிடம் பிடித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 98 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இந்த ஆட்டத்தில் கேசவ் மகராஜ் 5 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.
இதன் மூலம் தரவரிசையில் 687 புள்ளிகளுடன் 2 இடங்கள் முன்னேறி முதலிடத்தை...
ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் வரும் 29-ம் தேதி முதல் செப்டம்பர் 7-ம் தேதி வரை பிஹார் மாநிலம் ராஜ்கிரில் நடைபெறுகிறது. 8 அணிகள் கலந்து கொள்ளும் இந்தத் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணி வரும் 2026-ம் ஆண்டு பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில் நடைபெறும் உலகக் கோப்பை ஹாக்கி தொடருக்கு நேரடியாக தகுதி பெறும்.
பஹல்காம் தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா நடத்திய சிந்தூர் ஆபரேஷன் நடவடிக்கையால் ஆசிய...
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 98 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது ஆஸ்திரேலிய அணி.
ஆஸ்திரேலியாவின் கெய்ன்ஸ் நகரில் உள்ள கசாலிஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 296 ரன்கள் குவித்தது. தொடக்க வீரரான எய்டன் மார்க்ரம் 81 பந்துகளில், 9 பவுண்டரிகளுடன் 82 ரன்கள் விளாசினார். கேப்டன்...
சின்க்ஃபீல்ட் கோப்பை செஸ் தொடர் அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் சுற்றில் இந்திய கிராண்ட் மாஸ்டரான ஆர்.
பிரக்ஞானந்தா, உலக சாம்பியனான சகநாட்டைச் சேர்ந்த டி.குகேஷுடன் மோதினார். இதில் வெள்ளை காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா 36-வது நகர்த்தலின் போது வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் பிரக்ஞானந்தா, நேரலை உலக தரவரிசையில் 3-வது இடத்துக்கு முன்னேறினார். அமெரிக்காவின் லேவோன் அரோனியன், உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக் அப்துசத்தோரோவை...
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் செப்டம்பர் 9 முதல் 28 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இதில் இந்திய அணி ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இதே பிரிவில் பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் அணிகளும் உள்ளன. இந்தத் தொடரில் கலந்து கொள்ளும் 15 பேரை உள்ளடக்கிய இந்திய அணி தேர்வு மும்பையில் நேற்று தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் தலைமையில் நடைபெற்றது. கேப்டன்...
ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் வரும் செப்டம்பர் 30-ம் தேதி இந்தியாவில் தொடங்குகிறது. இந்நிலையில் இந்த தொடருக்கான டிராபி சுற்றுப்பயண தொடக்க விழா மும்பையில் நேற்று நடைபெற்றது. இதில் ஐசிசி தலைவர் ஜெய் ஷா, பிசிசிஐ செயலாளார் தேவஜித் சைகியா, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங், இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் மற்றும் சக வீராங்கனைகளான...
திருவள்ளூர் பிரீமியர் லீக் ஹாக்கி தொடர் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நேற்று தொடங்கியது. ‘ஏ’ பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் ஐஒபி 4-1 என்ற கோல் கணக்கில் மாஸ்கோ மேஜிக் அணியை வீழ்த்தியது. ஐஓபி அணி சார்பில் பர்தாஸ் திர்கே 3 கோல்களையும், சுதீப் சிராம்கோ ஒரு கோலும் அடித்தனர்.
‘பி’ பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் தெற்கு ரயில்வே ஏஜி அலுவலக அணிகள் மோதின. இந்த ஆட்டம்...
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் டார்வின் நகரில் நடைபெற்ற முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
179 ரன் இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்க அணி 9 விக்கெட் இழப்புக்கு 161 ரன் எடுத்து தோல்வி அடைந்திருந்தது. இந்நிலையில் இரு அணிகளும் இன்று 2-வது டி20 ஆட்டத்தில்...










